ப்ரீமியர் லீக் கிண்ணத்தை நெருங்கும் லிவர்பூல்

63

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், இத்தாலி சிரீ A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, 

லிவர்பூல் எதிர் மன்செஸ்டர் சிட்டி

ப்ரீமியர் லீக் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி லிவர்பூல் அணி புள்ளிப்பட்டியலில் எட்டுப் புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் மூலம் சம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பையும் அந்த அணி அதிகரித்துக் கொண்டுள்ளது. 

லா லீகாவில் பார்சிலோனா, ரியல் மெட்ரிட் கடும் போட்டி: செல்சி தொடர்ந்து 6ஆவது வெற்றி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லீகா…….

அன்பீல்டில் நடைபெற்ற இந்தப் போட்டியின் ஆறாவது நிமிடத்திலேயே பிரேசிலின் பபின்ஹோ (Fabinho) பந்தை வேகமாகக் கடத்திச் என்று கோல் புகுத்தியதன் மூலம் லிவர்பூல் அணி முன்னிலை பெற்றது.  

பதில் கோல் திருப்புவதற்கு முயன்ற மன்செஸ்டர் சிட்டி அணி, ரஹிம் ஸ்டேர்லிங் மூலம் பெறும் வாய்ப்பை தவறவிட்டது. 

ஆனால் மீண்டும் 13 ஆவது நிமிடத்தில் செயற்பட்ட லிவர்பூல் அணி மொஹமட் சலாஹ் மூலம் இரண்டாவது கோலை பெற்றது. இடது பக்கம் இருந்து அண்டி ரொபட்சன் பரிமாற்றிய பந்தை பெற்ற மொஹமட் சலாஹ் சிறப்பாக அதனை கோலாக மாற்றினார்.    

இடைவேளைக்குப் பின்னர் ஆறு நிமிடங்கள் கழித்து சாடியோ மானே பெற்ற கோல் மூலம் லிவர்பூல் கழகம் 3-0 என முன்னிலை பெற, மன்செஸ்டர் சிட்டி அணி இந்த பருவத்தில் தனது மூன்றாவது தோல்வியை சந்திப்பது உறுதியானது.   

அன்ஜலினோ தாழ்வாகப் பெற்றுக்கொடுத்த பந்தை பெர்னாடோ சில்வா 78 ஆவது நிமிடத்தில் கோலாக மாற்றியதன் மூலம் மன்செஸ்டர் சிட்டி அணி கடைசி நேரத்தில் நெருக்கடி கொடுக்க முயன்றபோது லிவர்பூல் கழகம் தனது வெற்றியை உறுதி செய்துகொண்டது.

மன்செஸ்டர் யுனைடட் எதிர் பிரைட்டன்

பிரைட்டன் அணிக்கு எதிரான உறுதியான வெற்றி ஒன்றை பெற்ற மன்செஸ்டர் யுனைடட் ப்ரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. 

மத்தியகள வீரர் அன்ட்ரியஸ் பெரைரா (Andreas Pereira) 17 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் முன்னிலை அடைந்த மன்செஸ்டர் யுனைடட் அணி இரண்டு நிமிடங்கள் கழித்து டேவி ப்ரொப்பர் பெற்ற ஓன் கோலால் எதிரணிக்கு நெருக்கடி கொண்டுக்க முடிந்தது. 

இந்நிலையில் லுவிஸ் டுன்க் 64 ஆவது நிமிடத்தில் பிரைட்டன் சார்பில் கோல் பெற்றபோதும் அடுத்த நான்காவது நிமிடத்தில் மார்கஸ் ரஷ்போர்ட் பெற்ற கோல் மூலம் மன்செஸ்டர் யுனைடட் 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.   

இந்தப் போட்டியில் தோற்ற பிரைட்டன் அணி ப்ரிமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 11 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

ஜுவன்டஸ் எதிர் ஏ.சி. மிலான்

தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியிலும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பதில் வீரராக வந்த போல் டிபலா பெற்ற கோலின் மூலம் ஏ.சி. மிலானுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற ஜுவன்டஸ் சீரி A தொடரில் முதலிடத்திற்கு முன்னேறியது.

9 வீரர்களுடன் போராடித் தோற்ற இலங்கை இளம் வீரர்கள்

துர்மனிஸ்தான் அணிக்கு எதிரான 19 வயதுக்கு …..

பயிற்சியாளர் மெரிசோ சாரி 55 ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக அனுப்பிய போல் டிபலா 20 நிமிடங்கள் கழித்து ஜுவன்டஸ் அணிக்கு வெற்றி கோலை பெற்றுக்கொடுத்தார். 

இதன்படி 34 வயதான ரொனால்டோவுக்கு பதில் இரண்டாவது தடவையாகவும் மாற்று வீரர் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பருவத்தில் ஒட்டுமொத்த போட்டிகளிலும் இவ்வாறு இரு முறையே நிகழ்ந்தது. 

கடந்த புதன்கிழமை நடந்த லொகொமோடிவ் மொஸ்கோ அணிக்கு எதிரான சம்பியன்ஸ் லீக் போட்டியில் எட்டு நிமிடங்கள் இருக்கும்போது ரொனால்டோவுக்காக மாற்று வீரர் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் அந்தப் போட்டியில் ஜுவன்டஸ் 2-1 என வெற்றி பெற்றது.    

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<