லூயிஸ் சுவாரஸ் மற்றும் லியோனல் மெஸ்ஸியின் அதிரடி கோல்களின் மூலம் நான்காவது தடவையாக பார்சிலோனா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

மன்செஸ்டர் சிட்டி எதிர் வெஸ்ட் ஹாம் யுனைடெட்

Premier League - Manchester United v West Ham Unitedவெஸ்ட் ஹாம் யுனைடெட் மற்றும் மன்செஸ்டர் சிட்டி ஆகிய அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற பிரிமியர் லீக் கழகங்களுக்கு இடையிலான போட்டியில் 4-0 என்ற கோல்கள் அடிப்படையில் வெஸ்ட் ஹாம் யுனைடெட்டை வெற்றியீட்டி பிரீமியர் லீக் பட்டத்துக்கான அபிலாஷைகளை தக்க வைத்து கொண்ட அதேவேளை வெற்றிப் பாதைக்கு திரும்பியது.

போட்டியின் முதல் பாதி நேரத்திலேயே கெவின் டி ப்ருனோ(16வது நிமிடம்), டேவிட் சில்வா(20வது நிமிடம்),  மற்றும் புதிதாக அணியில் இணைந்து கொண்ட கேப்ரியல் ஜீசஸ்(38வது நிமிடம்) தலா ஒரு கோல் வீதம் மூன்று கோல்களை பெற்றுக்கொண்டனர். அத்துடன் இரண்டாம் பாதியில் யாயா துஅரே(66வது நிமிடம்) பெனால்டி மூலமாக கோல் ஒன்றினை பெற்றுக்கொள்ள 4-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிட்டி வெற்றியை தனதாக்கியது.

தொடர்கிறது லெஸ்டர் அணியின் சோகம்: ஆர்சனல் அணிக்கு அதிர்ச்சி தோல்வி

பிரீமியர் லீக் தொடர்

அதே நேரம், ஏற்கனவே இரண்டு தடவைகளை வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியை, மன்செஸ்டர் சிட்டி அணி வெற்றியீட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றின் மூலம் 46 புள்ளிகளுடன் தர வரிசையில் லிவர்பூல் அணிக்கு அடுத்ததாக 5 ஆவது இடத்தில் உள்ளது.


மன்செஸ்டர் யுனைடெட் எதிர் ஹல் சிட்டி

Manchester United v Hull City - Premier Leagueஓல்ட் ட்ரேபோர்ட், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியில், ஹல் சிட்டி கோல் காப்பளார் எல்வின் ஜகாபோவிச்சின் சிறந்த கோல் தடுப்புகளினால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய மன்செஸ்டர் யுனைடட், தனது முழு பலத்துடன் சலட்டன் இப்ராஹிமோவிக் மற்றும் முன்கள மாற்று வீரர் ஜுவான் மாதா ஆகியோரால் கோல் கம்பத்தினுள் செலுத்தப்பட்ட அதிரடி கோல்களை கோல் காப்பாளர் எல்வின் ஜகாபோவிச்சினால் முறியடிக்கப்பட்டன.

அதேநேரம் ஹல் சிட்டி வீரர் லாசர் மர்கவிக்கு கிடைக்கபெற்ற சந்தர்ப்பதை பயன்படுத்தி அடித்த கோல் துரதிஷ்டவசமாக கோல் கம்பத்தில் பட்டு கோலுக்கு வெளியே சென்றது. வலிமைமிக்க மன்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவுற்றமை ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.


பார்சிலோனா கால்பந்து கழகம் எதிர் அத்லெட்டிகோ டி மட்ரிட்

544609-messi-suarez-gettyலூயிஸ் சுவராஸ் மற்றும் லியோனல் மெஸ்ஸியின் அதிரடி கோல்களினால் கிங்க்ஸ் கிண்ண (கோபா டெல் ரே) இறுதிப் போட்டிக்கு பார்சிலோனா கால்பந்து கழகம் தொடர்ந்து நான்காவது தடவையாக தகுதி பெற்றுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான அரை இறுதிப் போட்டியில் போட்டி ஆரம்பித்து ஏழாவது நிமிடத்தில் தனது வேகத்தின் மூலமாக லூயிஸ் சுவராஸ் டி மாட்ரிட்டுக்கு எதிராக முதல் கோலை பதிவு செய்தார்.

அதன் பின்னர், சிறிது நேரத்தில், லியோனல் மெஸ்ஸி கோல் கம்பத்திலிருந்து 33 மீட்டர் தூரத்திலிருந்து அதிரடியான உதையின் மூலம் கோலொன்றினைப் பெற்றுக்கொள்ள முதல் பாதி நேரம் நிறைவின் போது பார்சிலோனா கால்பந்து கழகம் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

எனினும், இரண்டாவது பாதியில் பலத்த போராட்டத்தின் மத்தியில் அத்லெட்டிகோ டி மட்ரிட் கழகம் அண்டோய்னி கிறீஸ்மன் மூலம் இறுதி நேரத்தில் ஒரு கோலை பெற்றுக்கொண்ட போதிலும் பார்சிலோனா கால்பந்து கழகம் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.