இந்திய தொடரிலிருந்து வெளியேறும் ஷமார் ஜோசப்

West Indies tour of India 2025

76
Shamar Joseph

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான குழாத்திலிருந்து மே.தீவுகளின் வேகப்பந்துவீச்சாளர் ஷமார் ஜோசப் நீக்கப்பட்டுள்ளார்.

ஷமார் ஜோசப் உபாதை காரணமாக இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என  மே.தீவுகள் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

>>பர்ஹான், ரவூப் தொடர்பில் ஐசிசியிடம் முறையிட்டுள்ள இந்தியா<<

எனவே ஷமார் ஜோசப்புக்கு பதிலாக வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் ஜோன் லைன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். பார்படோஸை சேர்ந்த இவர் இதுவரை 19 முதற்தர போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், 432 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இந்தியா மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2ஆம் திகதி அஹமதாபாத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் குழாம்

ரொஸ்டன் சேஸ் (தலைவர்), ஜோமல் வொரிகன், கெவ்லோன் அண்டர்சன், அலிக் அதனைஷ், ஜோன் கெம்பெல், டெக்நரைன் சந்ரபோல், ஜஸ்டின் கிரேவ்ஸ், ஷேய் ஹோப், டெவின் இம்லச், அல்ஷாரி ஜோசப், ஜோன் லைன், பிரெண்டன் கிங், அண்டர்சன் பிலிப், கேரி பீரி, ஜெய்டன் சீல்ஸ்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<