முக்கிய வேகப்பந்துவீச்சாளரினை இழக்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ்

IPL 2025

72
Sandeep Sharma

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரான சந்தீப் சர்மா இந்தப் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>2026 மகளிர் T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டி லோர்ட்ஸில்<<

31 வயது நிரம்பிய சந்தீப் சர்மா, குஜராத் டைடன்ஸ் அணியுடன் நடைபெற்ற IPL தொடரின் லீக் ஆட்டத்தில் விரல் உபாதைக்குள்ளாகியதோடு குறிப்பிட்ட உபாதையே அவர் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடா>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<மல் போனமைக்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

சந்தீப் சர்மா உபாதைக்குள்ளாக முன்னர் இந்தப் பருவத்திற்கான IPL தொடரில் மொத்தமாக 10 போட்டிகளில் ஆடி 9 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

இதேநேரம் சந்தீப் சர்மாவின் பிரதியீட்டு வீரராக ஆகாஷ் மத்வால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<