தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர்

South Africa's Tour Of Zimbabwe 2025 

6
South Africa's Tour Of Zimbabwe 2025 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்கா அணியின் தலைவர் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளார்.

இதனையடுத்து அந்த அணியின் பதில் தலைவராக கேசவ் மஹாராஜை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நடப்பு உலக டெஸ்ட் சம்பியனான தென்னாப்பிரிக்கா அணி இம்மாத இறுதியில் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜூன் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது இந்த டெஸ்ட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்கா அணியின் தலைவர் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளார்.

முன்னதாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸின் போது டெம்பா பவுமா தசைபிடிப்பால் அவதிப்பட்டு வந்தார். அந்த நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைச் சதம் அடித்து அசத்தியதுடன் அணியின் வெற்றியிலும் மிக முக்கிய பங்கினை வகித்தார்.

எனவே, அவருக்கு இன்னும் சில ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பவுமா விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கானா தென்னாப்பிரிக்கா அணியின் பதில் தலைவராக சுழல்பந்து வீச்சாளர் கேசவ் மஹாராஜ் செயல்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்த அணியில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், லெசெகோ செனோக்வானே, கோடி யூசுஃப், டெவால்ட் பிரெவிஸ் மற்றும் ப்ரீனெலன் சுப்ரயன் உள்ளிட்ட அறிமுக வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில், எய்டன் மார்க்ரம், காகிசோ ரபாடா, மார்கோ ஜன்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். இது தவிர, வேகப்பந்து வீச்சாளரான லுங்கி இங்கிடி 2ஆவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

அண்மையில் லோர்ட்ஸில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி சம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி விபரம்: கேஷவ் மஹாராஜ் (தலைவர்), டேவிட் பெடிங்ஹாம், மெத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் பிரெவிஸ், கார்பின் போஷ், டோனி டி சோர்ஜி, ஜுபைர் ஹம்சா, குவேனா மபாகா, வியான் முல்டர், லுங்கி இங்கிடி, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், லெசெகோ செனோக்வானே, ப்ரீனெலன் சுப்ரயன், கைல் வெர்ரைன் மற்றும் கோடி யூசுஃப்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<