டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தை பெற்ற அஸ்வின்

108

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்காக வெளியிடப்பட்டிருக்கும் புதிய தரவரிசையில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சனை பின்தள்ளி முதலிடம் பெற்றிருக்கின்றார்.

விக்கெட் வேட்டையில் வியாஸ்காந்த், விதுசன்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது தரப்பு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலை அடைய உதவி இருந்ததே அவர் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பெற காரணமாக அமைந்திருந்தது.

அந்தவகையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது 864 புள்ளிகளுடன் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்றிருக்கின்றார். இதேநேரம் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் தோல்வியினை அடுத்து ஜேம்ஸ் அன்டர்சன் தரநிலைப் புள்ளிகளை இழந்திருப்பதோடு அவர் தற்போது 859 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தடவையாக டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் அதன் பின்னர் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஓரிரு தடவைகள் முதலிடம் பெற்ற நிலையில், இது அவர் மீண்டும் முதலிடம் பெறும் சந்தர்ப்பமாக மாறியிருக்கின்றது.

அத்துடன் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது அவுஸ்திரேலிய – இந்திய அணிகள் இடையில் நடைபெற்று வருகின்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயற்படும் போது அவரினால் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்க முடியும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

IPL தொடரிலிருந்து வெளியேறும் ஜஸ்ப்ரிட் பும்ரா?

மறுமுனையில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட மற்றுமொரு இந்திய வீரரான ரவீந்திர ஜடேஜாவும், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முன்னேறியிருப்பதோடு அவர் தற்போது 763 புள்ளிகளுடன் 8ஆம் இடத்தில் காணப்படுகின்றார்.

இதேநேரம் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் ஆஸி. அணியின் மார்னஸ் லபச்சேனே 912 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் இருப்பதோடு, நியூசிலாந்து – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய ஜோ ரூட் தற்போது 871 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியிருக்கின்றார்.

அத்துடன் புதிய டெஸ்ட் துடுப்பாட்ட நட்சத்திரமாக மாறத் தொடங்கியிருக்கும் இங்கிலாந்தின் ஹர்ரி புரூக், புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முன்னேற்றம் காண்பித்திருப்பதோடு அவர் 15 இடங்கள் முன்னேறி தற்போது 16ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை

டெஸ்ட் துடுப்பாட்டவீரர்கள் தரவரிசை

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<