2020 ஐ.பி.எல் தொடருக்கான 8 அணிகளினதும் குழாம்கள்

155
iplt20.com

அடுத்த வருடம் (2020) நடைபெறவுள்ள 13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரின் ஏலம் நிறைவு பெற்றுள்ளதன் அடிப்படையில் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளினதும் இறுதி உத்தியோகபூர்வ குழாம்கள் வெளியிடப்பட்டுள்ளது.  

கிரிக்கெட் உலகில் நடைபெறும் முன்னணி லீக் தொடர்களில் ஒன்றான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. குறித்த தொடரில் பங்கேற்பதற்காக சில வீரர்கள் ஒவ்வொரு அணிகளினாலும் தக்கவைக்கப்பட்ட வீரர்களாக காணப்படுவர். 

மாலிங்கவுடன் ஐ.பி.எல் தொடரில் இணையும் இசுரு உதான

கொல்கத்தாவில் இன்று (19) நடைபெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) ஏலத்தில்…

குறித்த தக்க வைக்கப்பட்ட வீரர்களுக்கு மேலதிகமாக ஒவ்வொரு வருடமும் ஏனைய வீரர்கள் ஏலத்தின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்படுவர். அந்த அடிப்படையில் மீதமுள்ள வீரர்களை கொள்வனவு செய்வதற்கான ஏலம் நேற்று (19) கொல்கத்தாவில் நடைபெற்றது. குறித்த ஏலத்திலிருந்து 8 அணிகளினாலும் மொத்தமாக 62 வீரர்கள் கொள்வனவு செய்யப்பட்டனர். 

இதில் வெளிநாட்டு வீரர்களாக (இந்தியா தவிர்ந்த ஏனைய நாட்டு வீரர்கள்) 29 பேரும், இந்திய வீரர்களாக 33 பேரும் கொள்வனவு செய்யப்பட்டனர். மேலும், குறித்த 62 பேரில் 32 வீரர்கள் ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் விளையாடிய வீரர்களாகவும், 30 வீரர்கள் புதுமுக வீரர்களாகவும் காணப்படுகின்றனர்.  

இனி ஒவ்வொரு அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தலாம். (வீரர்கள் கொள்வனவு செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும் இந்திய ரூபாவில் தரப்பட்டுள்ளது)

கிங்ஸ் இலவன் பஞ்சாப்

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியின் குழாத்தில் மொத்தமாக 25 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற ஏலத்தில் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியினால் மொத்தமாக 9 வீரர்கள் கொள்வனவு செய்யப்பட்டனர். இதில் 4 வெளிநாட்டு வீரர்களும், 5 இந்திய வீரர்களும் காணப்படுகின்றனர். 

மும்பை அணியில் மீண்டும் விளையாடவுள்ள லசித் மாலிங்க

2020ஆம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) ஏலத்தையொட்டி, மும்பை…

கே.எல் ராகுல் (அணித்தலைவர்), அர்ஸ்டீப் சிங், கிறிஸ் கெய்ல் (மே.தீ), தர்சன் நால்காண்டே, கிறிஸ்னப்பா கௌதம், ஹார்டஸ் வில்ஜோன் (தென்.ஆ), ஹர்பிரீட் பரார், ஜகதீஸ் சுச்சித், கருண் நாயர், சர்ப்ராஸ் கான், மண்டீப் சிங், மயங்க் அகர்வால், மொஹமட் ஷமி, முஜீப் உர் ரஹ்மான் (ஆப்கான்), முருகன் அஸ்வின், நிக்கொலஸ் பூரண் (மே.தீ), கிறிஸ் ஜோர்டன் (இங்கி), கிளேன் மெக்ஸ்வெல் (ஆஸி.), சில்டொன் கொட்ரெல் (மே.தீ), தீபக் ஹோடா, இஷான் பொரெல், ரவி பிஸ்னோய், ஜேம்ஸ் நேசம் (நியூஸி.), தஜிந்தர் சிங் டிலோன், பிரப்சிம்ரன் சிங் 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

தமிழக வீரர் தினேஸ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மொத்தமாக 23 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது நேற்று நடைபெற்ற ஏலத்தில் 9 வீரர்களை கொள்வனவு செய்தது. இதில் 4 வெளிநாட்டு வீரர்களும், 5 இந்திய வீரர்களும் உள்ளடங்குகின்றனர். 

இயன் மோர்கன் (5.25 கோடி), பெட் கம்மிண்ஸ் (15.5 கோடி), ராகுல் திரிப்பாத்தி (60 இலட்சம்), வருண் சக்கரவர்த்தி (4 கோடி), மணிமாரன் சித்தார்த் (20 இலட்சம்), கிறிஸ் கிரீன் (20 இலட்சம்), டொம் பென்டன் (1 கோடி), பிரவீன் தம்பி (20 இலட்சம்), நிக்ஹில் நாயிக் (20 இலட்சம்) ஆகியோர் கொல்கத்தா அணியினால் ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட வீரர்களாக காணப்படுகின்றனர். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குழாம் 

தினேஸ் கார்த்திக் (அணித்தலைவர்), அண்ட்ரூ ரசல் (மே.தீ), ஹரி கார்னி (இங்கி), கமலேஸ் நாகர்கொடி, குல்தீப் யாதவ், லுக்கி போர்கசன் (நியூஸி), நித்திஸ் ரானா, பிரசித் கிரிஸ்னா, ரிங்கு சிங், சன்டீப் வாரியர், சிவம் மாவி, சுப்மன் கில், சித்தேஸ் லாட், சுனில் நரேன் (மே.தீ), இயன் மோர்கன் (இங்கி), பெட்; கம்மிண்ஸ் (ஆஸி.), ராகுல் திரிப்பாத்தி, வருண் சக்கரவர்த்தி, மணிமாரன் சித்தார்த், கிறிஸ் கிரீன் (ஆஸி.), டொம் பென்டன் (இங்கி), பிரவீன் தம்பி, நிக்ஹில் நாயிக்

டெல்லி கெப்பிடல்ஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சிரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கெப்பிடல்ஸ் அணியில் மொத்தமாக 22 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். நிறைவுக்கு வந்த ஏலத்தில் 5 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 3 இந்திய வீரர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 8 வீரர்கள் கொள்வனவு செய்யப்பட்டனர். 

ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட வீரராகளாக ஜேசன் ரோய் (1.5 கோடி), கிறிஸ் வோக்ஸ் (1.5 கோடி), அலக்ஸ் கெரி (2.4 கோடி), சிம்ரென் ஹெட்மயர் (7.75 கோடி), மோஹிட் சர்மா (50 இலட்சம்), துஸார் தேஸ்பாண்டே (20 இலட்சம்), மார்கஸ் ஸ்டொய்னிஸ் (4.8 கோடி), லலிட் யாதவ் (20 இலட்சம்) ஆகியோர் காணப்படுகின்றனர். 

டெல்லி கெப்பிடல்ஸ் குழாம்.. 

சிரேயஸ் ஐயர் (அணித்தலைவர்), அஜிங்கியா ரஹானே, அமிட் மிஸ்ரா, ஆவேஸ் கான், அக்ஸர் படேல், ஹர்ஸல் படேல், இஷாந்த் சர்மா, ககிஸோ ரபாடா (தெ.ஆ), கிமோ போல் (மே.தீ), பிரித்வி ஷோவ், ரவி அஸ்வின், ரிஷப் பண்ட், சன்டீப் லமிச்சேன் (நேபாளம்), ஷிகார் தவான், ஜேசன் ரோய் (இங்கி), கிறிஸ் வோக்ஸ் (இங்கி), அலக்ஸ் கெரி (ஆஸி.), சிம்ரென் ஹெட்மயர் (மே.தீ), மோஹிட் சர்மா, துஸார் தேஸ்பாண்டே, மார்கஸ் ஸ்டொய்னிஸ் (ஆஸி.), லலிட் யாதவ்

இலங்கை இளையோர் அணிக்கு அடுத்த தோல்வி

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு இளையோர் ஒருநாள் கிரிக்கெட்…

சென்னை சுப்பர் கிங்ஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் மொத்தமாக 24 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 4 வீரர்களை மாத்திரம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கொள்வனவு செய்தது. இதில் 2 இந்திய வீரர்களும், 2 வெளிநாட்டு வீரர்கள் காணப்படுகின்றனர். 

சாம் கரண் (5.5 கோடி), பியூஸ் சௌலா (6.75 கோடி), ஜொஸ் ஹெஸில்வூட் (2 கோடி), ரவி சாய் கிஷோர் (20 இலட்சம்) ஆகியோர் நேற்றைய ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட வீரர்களாக காணப்படுகின்றனர். 

சென்னை சுப்பர் கிங்ஸ் குழாம்

மஹேந்திர சிங் டோனி (அணித்தலைவர்), அம்பத்தி ராயுடு, தீபக் சஹார், டுவைன் பிராவோ (மே.தீ), பெப் டு பிளஸிஸ் (தெ.ஆ), ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் (தெ.ஆ), ஜெகதீசன் நாராயன், கரன் சர்மா, கேதார் ஜாதவ், லுங்கி ங்கிடி (தெ.ஆ), மிட்செல் சான்ட்னர் (நியூஸி), மோனு சிங், முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கைக்வாட், ஷேன் வெட்சன் (ஆஸி.), சர்துல் தாகூர், சுரேஸ் ரெய்னா, சாம் கரண் (இங்கி), பியூஸ் சௌலா, ஜொஸ் ஹெஸில்வூட் (ஆஸி.), ரவி சாய் கிஷோர், ஆஸிப் கே.எம்

சன்ரைஸஸ் ஹைதராபாத் 

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியில் மொத்தமாக 25 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் இரு வெளிநாட்டு வீரர்களுடன் மொத்தமாக 7 வீரர்கள் கொள்வனவு செய்யப்பட்டனர். 

விராட் சிங் (1.9 கோடி), பிரியம் கார்க் (1.9 கோடி), மிட்செல் மார்ஸ் (2 கோடி), பவங்கா சன்டீப் (20 இலட்சம்), பெபியன் அலன் (50 இலட்சம்), அப்துல் சமட் (20 இலட்சம்), சன்ஜெய் யாதவ் (20 இலட்சம்) ஆகிய வீரர்கள் ஏலத்தின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டனர். 

சன்ரைஸஸ் ஹைதராபாத் குழாம் 

கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), அபிசேக் சர்மா, பசில் தம்பி, புவ்னேஸ்வர் குமார், பில்லி ஸ்டன்லேக் (ஆஸி.), டேவிட் வோர்னர் (ஆஸி), ஜொனி பெயர்ஸ்டோ (இங்கி), விரித்ஹிமன் சாஹா, மனேஸ் பாண்டி, மொஹம்மட் நபி (ஆப்கான்), ரஷீட் கான் (ஆப்கான்), சன்டீப் சர்மா, ஷபாஸ் நடீம், ஸ்ரீவாட்ஸ் கோஸ்வாமி, சித்தார்த் கௌல், கலீல் அஹமட், டி. நடராஜன்;, விஜய் சங்கர், விராட் சிங், பிரியம் கார்க், மிட்செல் மார்ஸ் (ஆஸி.), பவங்கா சன்டீப், பெபியன் அலன் (மே.தீ), அப்துல் சமட், சன்ஜெய் யாதவ்

ராஜஸ்தான் ரோயல்ஸ் 

அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் மொத்தமாக 25 வீரர்கள் காணப்படுகின்றனர். நேற்று நடைபெற்ற ஏலத்தில் ராஜஸ்தான் அணியினால் 4 வெளிநாட்டு வீரர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 11 வீரர்கள் கொள்வனவு செய்யப்பட்டனர். 

ரொபின் உத்தப்பா (3 கோடி), ஜெய்தேவ் உனட்கட் (3 கோடி)யஸாஸ்வி ஜெய்ஸ்வால் (2.4 கோடி), அனூஜ் ரவாத் (80 இலட்சம்), ஆகாஸ் சிங் (20 இலட்சம்), கார்திக் தியாகி (1.3 கோடி), டேவிட் மில்லர் (75 இலட்சம்), உஸேன் தோமஸ் (50 இலட்சம்), அனிருத்தா ஜோஸி (20 இலட்சம்), அண்ட்ரூ டை (1 கோடி), டொம் கரன் (1 கோடி) ஆகியோர் நேற்றைய ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்டனர். 

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் நடைபெறுவதில் தாமதம்

அயர்லாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு…

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இறுதி குழாம்.

ஸ்டீவ் ஸ்மித் (அணித்தலைவர்), அண்கிட் சிங் ராஜ்போட், பென் ஸ்டோக்ஸ் (இங்.), ஜொப்ரா ஆர்ச்சர் (இங்), ஜொஸ் பட்லர் (இங்.), மஹிபால் லொம்ரோர், மனன் வோரா, மயங்க் மார்கண்டே, ராகுல் திவாடியா, ரியன் பரக், சஞ்சு சம்சன், சிரேயஸ் கோபால், வருன் அருன், ரொபின் உத்தப்பா, ஜெய்தேவ் உனட்கட், யஸாஸ்வி ஜெய்ஸ்வால், அனூஜ் ரவாத், ஆகாஸ் சிங், கார்திக் தியாகி, டேவிட் மில்லர் (தெ.ஆ), உஸேன் தோமஸ் (மே.தீ), அனிருத்தா ஜோஸி, அண்ட்ரூ டை (ஆஸி.), டொம் கரன் (இங்.), ஸஸங்க் சிங்

ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களுர்

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களுர் அணியில் ஏலத்தின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட 6 வெளிநாட்டு வீரர்கள் உள்ளடங்களாக 8 வீரர்களுடன் மொத்தமாக 21 வீரர்கள் காணப்படுகின்றனர். 

நேற்றைய ஏலத்தின் போது ஆரொன் பிஞ்ச் (4.4 கோடி), கிறிஸ் மொரிஸ் (10 கோடி), ஜொஸ் பிலிப் (20 இலட்சம்), கேன் ரிச்சர்ட்சன் (4 கோடி), பவன் தேஸ்பாண்டே (20 இலட்சம்), டேல் ஸ்டைன் (2 கோடி), ஸபாஸ் அஹமட் (20 இலட்சம்), இசுரு உதான (50 இலட்சம்) ஆகிய வீரர்கள் கொள்வனவு செய்யப்பட்டனர். 

ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களுர் அணியின் இறுதி குழாம். 

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ஏ.பி. டீ வில்லியர்ஸ் (தெ.ஆ), தேவ்டுட் படிக்கல், குர்கீரத் சிங், மொயின் அலி (இங்கி.), மொஹமட் சிராஜ், நவ்தீப் ஷைனி, பார்தீவ் படேல், பவன் நெகி, சிவம் துபே, உமேஸ் யாதவ், யுஸ்வேந்திர சஹால், வொஷிங்டன் சுந்தர், அரேன் பிஞ்ச் (ஆஸி.), கிறிஸ் மொரஸ் (தெ.ஆ), ஜொஸ்; பிலிப் (ஆஸி.), கேன் ரிச்சர்ட்சன் (ஆஸி.), பவன் தேஸ்பாண்டே, டேல் ஸ்டைன் (தெ.ஆ), ஸபாஸ் அஹமட், இசுரு உதான (இலங்கை)

பாகிஸ்தான் சென்று மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ள சங்கக்கார

குமார் சங்கக்கார தலைமையிலான மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் (MCC)…

மும்பை இந்தியன்ஸ் 

இந்திய அணிaயின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், அணியின் உபதலைவருமான ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் மொத்தமாக 24 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இதில் நேற்றையை ஏலத்தின் போது 6 வீரர்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தனர். 

கிறிஸ் லைன் (2 கோடி), நதன் குல்டர் நைல் (8 கோடி), சௌரப் திவாரி (50 இலட்சம்), மொஹ்சின் கான் (20 இலட்சம்), திக்விஜய் தேஸ்முக் (20 இலட்சம்), பிலவந்த் ராய் சிங் (20 இலட்சம்) ஆகியோர் நேற்றைய ஏலத்தில் மும்பை அணியினால் கொள்வனவு செய்யப்பட்டனர். 

மும்பை இந்தியன்ஸ் அணியின் இறுதி குழாம்.

ரோஹிட் சர்மா (அணித்தலைவர்), ஆதித்யா தரே, அன்மொல்பிரீட் சிங், தவல் குல்கர்னி, ஹார்டிக் பாண்டியா, இஷான் கிஷான், ஜெஸ்பிரிட் பும்ரா, ஜெயந்;த் யாதவ், கிரண் பொல்லார்ட் (மே.தீ), குர்னல் பாண்டியா, லசித் மாலிங்க (இலங்கை), மிட்செல் மெக்லெனெகன் (நியூ), குயின்டன் டி குக் (தெ.ஆ), ராகுல் சஹார், சேர்பைன் ரதர்போர்ட் (மே.தீ), சூர்யகுமார் யாதவ், ட்ரெண்ட் போல்ட் (நியூஸி.), கிறிஸ் லைன் (ஆஸி.), நதன் குல்டர் நைல் (ஆஸி.), சௌரப் திவாரி, மொஹ்சின் கான், திக்விஜய் தேஸ்முக், பிலவந்த் ராய் சிங், அன்குல் ரோய்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<