“வீரர்கள் என்ற ரீதியில் நாட்டுக்காக விளையாட வேண்டும்” – ஷானக

India tour of Sri Lanka 2021

1999

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரில், வீரர்கள் அனைவரும் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்வதுடன், நாட்டுக்காக விளையாட வேண்டிய தேவை உள்ளது என இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் நாளைய தினம் (18) கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் குறித்த கருத்துக்களை இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக பகிர்ந்துக்கொண்டார்.

இந்திய கிரிக்கெட் அணியுடன் ஆடவுள்ள இலங்கை குழாம் வெளியீடு

“இளம் வீரர்களுடன் விளையாடும் போது, முதலில் வீரர்களை அணியென்ற ரீதியில் ஒன்றிணைக்கவேண்டும். என்னை பொருத்தவரையில் அணியில் ஒற்றுமை மற்றும் நம்பிக்கை மட்டம் அதிகமாக உள்ளது. இதுதான் அணிக்கு முக்கியம்.

போட்டிக்கு செல்லும் போது, ஒவ்வொரு வீரரிடமும் தங்களுடைய பணி தொடர்பிலான அவதானம் வேண்டும். அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு போட்டி திட்டங்கள் இருக்கும். அணியில் இருக்கும் 11 வீரர்களுக்கும் நாம் எவ்வாறு போட்டியை எதிர்கொள்கிறோம் என்ற சிந்தனை வேண்டும். 

வீரர்கள் இதற்கு முன்னர் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதனால், வீரர்களுக்கு போட்டியை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்ற சிந்தனை இருக்கும். எனவே, வீரர்கள் என்ற ரீதியில் நாட்டுக்காக விளையாடவேண்டிய தேவை உள்ளது” என்றார்.

இதேவேளை, இந்திய அணியிலும் முன்னணி வீரர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்திய தசுன் ஷானக, இலங்கை அணியை போன்று அவர்களுக்கும் சவால் இருக்கும் என்பதை சுட்டிக்காட்டினார்.

“இந்திய அணியிலும் எமது அணியை போன்று இளம் வீரர்கள் உள்ளனர். எனவே, அவர்களுக்கும் சவால்கள் இருக்கும். எமது அணி வீரர்களை பார்க்கும் போது, இங்கிலாந்து தொடரில் விளையாடிய அனுபவத்துடன் உள்ளனர். இளம் வீரர்களாக இருந்தாலும், இந்திய அணியை விட சற்று முன்னிலையில் நாம் இருக்கிறோம்” என மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நாளை (18) ஆரம்பமாகவுள்ளதுடன், T20I தொடர் எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<