தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய சிராஜ்

ICC ODI Rankings

62
Mohammed Siraj

சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார். 

ஆசியக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய மொஹமட் சிராஜ் வெறும் 21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதுமாத்திரமின்றி ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தார். 

>> மீண்டும் இந்திய அணியில் அஸ்வின்; அணிக்கு புதிய தலைவர்

இந்தநிலையில் முதலிடத்திலிருந்த ஜோஷ் ஹெஷல்வூட், ரஷீட் கான், டிரெண்ட் போல்ட் மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகியோரை பின்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். 

இவரையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், 5வது இடத்தை ரஷீட் கான் பிடித்துள்ளார். 

அதேநேரம் நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மெட் ஹென்ரி முதல் 10 வீரர்களுக்குள் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து தொடரில் பிரகாசித்திருந்த இவர் 9வது இடத்தை பிடித்திருக்கிறார். 

இதேவேளை ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வரிசையில் பாகிஸ்தான் அணியின் பாபர் அஷாம் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், சகலதுறை வீரர்கள் வரிசையில் பங்களாதேஷ் அணியின் தலைவர் சகீப் அல் ஹஸன் முதலிடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

>>  மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<