முதல் பருவகாலத்துக்கான லங்கா T10 தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆரம்பத்தில் லங்கா T10 தொடரை ஜூன் மாதத்தில் நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த போதும், தற்போது டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கான காலப்பகுதியை இலங்கை கிரிக்கெட் சபை ஐசிசியிடம் பெற்றுக்கொண்டுள்ளது.
லக்னோவ் அணியுடன் இணைவாரா ஜஸ்டின் லேங்கர்?
சர்வதேசத்தின் முன்னணி வீரர்களை உள்ளடக்கியதாக நடைபெறவுள்ள இந்த T10 தொடரில் 6 ஆடவர் மற்றும் 4 மகளிர் அணிகள் மோதவுள்ளன. ஒரு அணியில் 16 வீரர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்பதுடன், 6 வெளிநாட்டு வீரர்களை அணிகள் இணைத்துக்கொள்ள முடியும்.
லங்கா T10 தொடரின் பங்குதாரர்களாக டிடென் ஸ்போர்ட்ஸ் மெனேஜ்மண்ட் (TTen Sports Management) மற்றும் டிடென் கிளோபல் ஸ்போர்ட்ஸ் மெனேஜ்மண்ட் (TTen Global Sports) ஆகியவற்றுடன் இணைந்து இனவேடிவ் புரொடக்ஷன் குழுமம் (IPG) செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>




















