சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) அடுத்த ஆண்டு இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணையை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான குழு விபரம் மற்றும் போட்டி அட்டவணை இன்றைய தினம் (25) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
பெப்ரவரி 15 – இந்தியா – பாகிஸ்தான் மோதல் கொழும்பில்?
T20 உலகக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் விளையாடவுள்ளன. அத்துடன் முதல் நாளில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் மும்பையிலும், பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் கொல்கத்தாவிலும் மோதவுள்ளன.
ஐசிசி T20 உலகக்கிண்ண வரலாற்றில் இம்முறை ஒரே நாளில் மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டி முற்பகல் 11.00 மணிக்கும், இரண்டாவது போட்டி பிற்பகல் 3.00 மணிக்கும், மூன்றாவது போட்டி இரவு 7.00 மணிக்கும் நடைபெறவுள்ளன.
இதில் இலங்கை அணியை பொருத்தவரை ஏற்கனவே வெளிவந்த தகவல்களின்படி குழு B இல் இடம்பெற்றுள்ளது. இந்த குழாத்தில் இலங்கை அணியுடன், நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, சிம்பாப்வே மற்றும் ஓமான் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை அணியானது தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை பெப்ரவரி 8ஆம் திகதி கொழும்பில் எதிர்கொள்ளவுள்ளதுடன், ஓமான் (பல்லேகலை), அவுஸ்திரேலியா (பல்லேகலை) மற்றும் சிம்பாப்வே (சிம்பாப்வே) அணிகளை முறையே பெப்ரவரி 12, 16 மற்றும் 19ஆம் திகதிகளில் எதிர்கொள்ளவுள்ளது.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்
ஐசிசி T20 உலகக்கிண்ணத்தில் நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டுள்ள அணிகளில், ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். குறித்த 8 அணிகளும் இரண்டு குழுக்களாக வகுக்கப்படும் என்பதுடன், குறித்த குழுவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் போட்டி அட்டவணை
- பெப்ரவரி 8 – இலங்கை எதிர் அயர்லாந்து (ஆர்.பிரேமதாஸ)
- பெப்ரவரி 12 – இலங்கை எதிர் ஓமான் (பல்லேகலை)
- பெப்ரவரி 16 – இலங்கை எதிர் அவுஸ்திரேலியா (பல்லேகலை)
- பெப்ரவரி 19 – இலங்கை எதிர் சிம்பாப்வே (ஆர்.பிரேமதாஸ)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<





















