சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) ஐக்கிய அமெரிக்காவின் (Cricket USA) உறுப்புரிமையினை உடனடி அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>ILT20 மற்றும் Big Bash தொடர்களில் விளையாடவுள்ள அஸ்வின்<<
அதன்படி ஐ.சி.சி. இன் நிர்வாக கூட்டத்தொடரின் போது எடுக்கப்பட்ட முடிவுக்கு அமையவே ஐக்கிய அமெரிக்காவின், ஐ.சி.சி. உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு சுமார் ஒரு ஆண்டு காலம் மேற்கொள்ளப்பட்ட தீவிர மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஐக்கிய அமெரிக்கா ஐ.சி.சி. இன் உறுப்புரிமையினை இழந்த போதும் அதன் வீர, வீராங்கனைகள் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, இந்த விடயங்களை மேற்பார்வை செய்ய தற்காலிக அதிகாரிகள் கொண்ட குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஐக்கிய அமெரிக்கா ஐ.சி.சி. இன் விதிகளுக்கு இணங்க மாற்றங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில், ஐ.சி.சி. இன் உறுப்புரிமை மீள வழங்கப்பட பரிசீலிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<