டேவிட் வோர்னருக்கு நாடு திரும்புமாறு அதிரடி உத்தரவு..!

2218
Indiatimes.com

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடிவந்த டேவிட் வோர்னருக்கு உபாதை ஏற்பட்டதன் காரணமாக அவுஸ்திரேலியா நோக்கி திரும்புமாறு ஆஸி. கிரிக்கெட் சபை அறிவிப்பு விடுத்துள்ளது.

ஆஸி. கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் கடந்த வருடம் மார்ச் மாதம் கேப்டவுனில் தென்னாபிரிக்க அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டு ஒரு வருட கிரிக்கெட் போட்டித் தடைக்கு உள்ளானார்.

மைதானத்தை சுவாரஷ்யமாக்கிய வோர்னரின் வலதுகை துடுப்பாட்டம்

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும், அவுஸ்திரேலிய …

அத்துடன் அவருடன் சேர்ந்து ஆஸி. அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஒரு வருட தடைக்கும், கெமரூன் பென்கிராப்ட் 9 மாத தடைக்கும் உள்ளாகியிருந்தார்கள். இந்நிலையில் 9 மாத தடைக்கு உள்ளாகியிருந்த பென்கிராப்ட்டின் தடைக்காலம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் கே.எப்.சி பிக் பேஷ் லீக் தொடரில் ஆடி வருகின்றார்.

ஸ்மித் மற்றும் வோர்னர் ஆகியோரின் தடைக்காலம் நிறைவடைவதற்கு இன்னும் 2 மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில் இருவரும் .சி.சி  உலகக்கிண்ண தொடரை எதிர்கொள்வதற்காக கிரிக்கெட் விளையாட்டில் பயிற்சி வேண்டும் என்ற அடிப்படையில் ஆஸி. கிரிக்கெட் சபை இவர்கள் இருவருக்கும் பங்களாதேஷில் நடைபெறும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் போட்டித்தொடரில் விளையாட அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி பி.பி.எல் தொடரில் கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக விளையாடிவந்த ஸ்டீவ் ஸ்மித் உபாதை ஏற்பட்டதன் காரணமாக கடந்த வாரம் நாடு திரும்பியிருந்தார். இதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 2 மாத தனியான ஓய்வு அவருக்கு வேண்டுமென சிகிச்சையின் பின்னர் வைத்தியர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணியுடனான தொடர் மற்றும் உலகக்கிண்ண தொடர் போன்றவற்றில் விளையாடுவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தீவிரமான உபாதையிலிருந்து தப்பிய குசல் மெண்டிஸ்

கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் …

இந்நிலையில் அதே பி.பி.எல் தொடரில் சைல்ஹெட் சிக்ஸர்ஸ் அணியின் தலைவராக விளையாடிவந்த டேவிட் வோர்னருக்கும் முழங்கையில் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை எதிர்வரும் திங்கட்கிழமை (21) உடனடியாக பரிசோதனைக்கு வருமாறு ஆஸி. கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மேலும்,அவருடைய உபாதை குறித்து வெளிப்படையாக எதுவும் அறியவில்லை. எனினும் அவர் நாடு திரும்பும் வரையில் குறித்த அணிக்காக தொடர்ந்தும் விளையாட முடியும். அதாவது இன்று (18) மற்றும் நாளை (19) நடைபெறவுள்ள போட்டிகளில் வோர்னர் பங்கேற்க முடியும்.’ என ஆஸி. கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (18) நடைபெற்ற போட்டியில் டேவிட் வோர்னர் 43 பந்துகளுக்கு முகம்கொடுத்து 63 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நேற்று முன்தினம் (16) நடைபெற்ற போட்டியில் 19ஆவது ஓவருக்கு முகம் கொடுத்த இடது கை துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் வலது கை துடுப்பாட்ட வீரராக மாறி மேற்கிந்திய தீவுகள் அணியின் பகுதிநேர பந்துவீச்சாளரான கிறிஸ் கெய்லின் 3 பந்துகளுக்கு 14 ஓட்டங்களை விளாசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<