பிரிஸ்பேன் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட கவாஜா

137

பிக் பேஷ் T20 லீக்கின் (BBL) புதிய பருவத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடுவதற்கு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரரான உஸ்மான் கவாஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார்.

அதன்படி உஸ்மான் கவாஜா ஒப்பந்தத்திற்கு அமைய அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, பிக் பேஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஆடவிருக்கின்றார்.

வெண்டர்சேவின் டெஸ்ட் அறிமுகத்துடன் களமிறங்கும் இலங்கை!

ஏற்கனவே பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக ஆடியிருந்த கவாஜா, அவ்வணிக்காக இதுவரை கூடுதல் ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்டவீரராக  காணப்பட்டிருந்தார். எனினும், குடும்ப காரணங்களை சுட்டிக்காட்டியிருந்த உஸ்மான் கவாஜா சிட்னி தண்டர் அணியில் இருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

“ஹீட் அணியுடன் இணைந்து கா(G)ப்பா அரங்கில் ஆடும் போது, எனக்கு என்னுடைய குடும்பத்திற்கு முன்னாலும், எனது மக்களுக்கு முன்னாலும் விளையாடப் போகின்றேன் என்பது தெரியும். எனக்கு தண்டர் அணி விருப்பமாக இருக்கின்ற போதும், இப்போதைய நிலைமைக்கு இதுவே சரியான முடிவு” என உஸ்மான் கவாஜா புதிய அணியில் இணைந்தமை குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

இதேவேளை தற்போது இலங்கையில் காணப்படும் உஸ்மான் கவாஜா, இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<