கேலிக்கையான கிரிக்கெட் போட்டி குறித்து ICC விசாரணை

6667

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடந்த போட்டியொன்றில் இடம்பெற்ற அப்பட்டமாக தெரியக்கூடிய விதத்திலான ஆட்ட நிர்ணய விவகாரம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் (ICC) ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் தனியார் லீக் போட்டித் தொடர் ஒன்றில் வீரர்கள் சிலர் ஆட்டமிழந்த விதம் நகைச்சுவையாக இருந்தபோதும், அதில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.  

பாக். சுப்பர் லீக்கில் இணையும் திசர பெரேரா, அசேல குணரத்ன

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படுகின்ற 3ஆவது பருவகால …

இந்த சம்வத்தை அடுத்து ஓல்டைம் அஜ்மான் லீக் போட்டித் தொடருக்கு மைதானத்தை தொடர்ந்து பயன்படுத்த நிர்வாகத்தினர் மறுத்ததை அடுத்து தொடரின் இரண்டாவது தினத்தில் போட்டிகள் கைவிடப்பட்டன. ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபை மற்றும் சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலும் இந்த தொடருக்கு தடை விதித்துள்ளன.

அதேபோன்று, குறித்த போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்த உறுப்பு நாட்டுக்கு ICC கோரவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.  

இந்த போட்டி தொடர்பில் கடந்த செவ்வாய்கிழமை வெளியான வீடியோவில் பல விக்கெட்டுகள் வினோதமான முறையில் வீழ்த்தப்பட்டன. இந்த வீடியோ சமூகதளங்களில் பிரபலம் அடைந்ததை அடுத்தே ICC இன் அவதானத்தைப் பெற்றது.

இந்த T-20 போட்டியில் டுபாய் ஸ்டார் அணி, ஷார்ஜா வொரியஸ் அணிக்கு எதிராக எட்ட முடியுமான 136 ஓட்ட இலக்கையே துரத்தி ஆடியது. என்றாலும் அவ்வணி வீரர்கள் கேலிக்குரிய பாணியில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் 46 ஓட்டங்களையே பெற்றது. இதில் பெரும்பாலான ஆட்டமிழப்புகள் ரன் அவுட் அல்லது ஸ்டம்பாக இருந்தன.

துடுக்காட்ட வீரர் பந்தை அடித்தாடுவதற்கு தனக்குறிய கோட்டுக்கு வெளியில் வந்தபோதும் பந்து துடுப்பில் படாத நிலையில் ஸ்டம்ப் ஆவதை தவிர்க்க எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் இருப்பதை அந்த வீடியோவில் தெளிவாக காணமுடிகிறது. இதன்போது விக்கெட் காப்பாளர் பந்தை பெறுவதில் குழப்பங்கள் இழைத்தாலும் துடுப்பாட்ட வீரர் கோட்டை நோக்கி திரும்புவதை வேண்டும் என்றே தவிர்த்துக் கொள்கிறார்.

விக்கெட்டுக்கு இடையில் ஓடுவதிலும் இதே குழப்பம் நிலவுகிறது. வீரர்கள் ரன் அவுட் ஆவது தெளிவாகத் தெரியவே மறுமுனையை நோக்கி வேண்டும் என்று ஓடும் சிறுபிள்ளைத்தனமாக காட்சிகளை வீடியோவில் காணமுடிந்தது.  

உபாதைகள் அற்ற கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே.. இதன் முதல்கட்ட செயலமர்வு கடந்த சில …

கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான துடுப்பாட்டம், களத்தடுப்பு, விக்கெட்காப்பு மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடும் ஆட்டம்என்ற தலைப்பில் YouTube சமூகதளத்தில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு பரந்த அளவில் கண்டனங்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் வோகனும், “இதனை நம்ப முடியவில்லை…” என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட்மேனிய கிரிக்கெட் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி நிக் கம்மின்ஸ் டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் கருத்தில், “0:35 (வீடியோவில்) எனக்கு பிடித்தமான ரன் அவுட். துடுப்பாட்ட வீரர் தான் ரன் அவுட் ஆவதற்கு தன்னால் ஆன அனைத்து முயற்சியையும் செய்கிறார். ஆனால் களத்தடுப்பாளர் ஒத்துழைக்க மறுக்கிறார்என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.  

இவ்வாறான தொடர் விமர்சனங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த போட்டி தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ICC ஊழல் எதிர்ப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலக்ஸ் மார்ஷல் வெளியிட்டிருக்கும் அறிவிப்பொன்றில் கூறியிருப்பதாவது, “ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மானில் அண்மையில் நடந்த அஜ்மான் ஒல் ஸ்டார்ஸ் லீக் போட்டி தொடர்பில் ICC ஊழல் எதிர்ப்பு பிரிவு தற்போது விசாரணையை ஆரம்பித்துள்ளதுஎன்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடும்போது, போட்டியில் பங்கேற்ற சில வீரர்களுடன் உரையாடியதாக தெரிவித்தார். “இந்த வலுவான ஆதாரங்கள் இது ஒரு ஊழல் கொண்ட போட்டி என்பதை காட்டுகிறது. இது கிரிக்கெட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு இது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்என்றும் அவர் குறிப்பிட்டார்.  

இந்த போட்டிக்கு அனுமதி மறுத்ததாக குறிப்பிட்டிருக்கும் அஜ்மான் கிரிக்கெட் சங்கம் இதன் அனைத்து போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தது.