ஆஷஷ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற பேர்த் மைதானத்தின் ஆடுகளம் மிகச்சிறந்த தரத்தை கொண்டிருந்தது என சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆஷஷ் டெஸ்ட் போட்டி பேர்த் மைதானத்தில் இரண்டு நாட்களுக்குள் நடைபெற்று முடிந்தது.
>>பெதும் நிஸ்ஸங்க அசத்தல்; பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு முதல் வெற்றி<<
இந்தப் போட்டியின் முதல் நாளில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதுடன், வேகப்பந்துவீச்சாளர்களின் சிறந்த பிரகாசிப்புகளின் உதவியுடன் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.
குறித்த இந்த போட்டியின் பின்னர் ஆடுகளம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன. எனினும் போட்டி மத்தியஸ்தர் ரஞ்சன் மடுகல்ல, பேர்த் ஆடுகளம் மிகச்சிறந்த தரத்தில் இருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதில் ஆட்டத்தின் ஆரம்ப பகுதியில் வேகப்பந்துவீச்சாளர்களின் பந்தின் அசைவுத்தன்மை குறிப்பிடத்தக்க அளவில் இருந்ததுடன், பெளன்ஸ் சிறப்பான மட்டத்திலும், ஏற்றத்தாழ்வின்றி இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் துடுப்பாட்ட வீரர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமமான வாய்ப்புகளை கொடுக்கும் ஆடுகளமாக இந்த ஆடுகளம் இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
>>T20 உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியில் அயர்லாந்துடன் மோதும் இலங்கை<<
குறிப்பாக அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் டிராவிஷ் ஹெட் இரண்டாவது நாள் ஆட்டத்தில் 86 பந்துகளில் 123 ஓட்டங்களை விளாசியிருந்தார். எனவே ஆடுகளம் அடுத்த அடுத்த நாட்களில் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலகுவாக இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே பேர்த் ஆடுகளம் மிகச்சிறந்த ஆடுகள தரத்தை கொண்டிருந்தாக போட்டி மத்தியஸ்தர் மற்றும் ஐசிசி அறிவித்துள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















