“சங்கா ஓய்வுபெற்றதை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்” – அஸ்வின்

Indian Premier League 2022

3754

இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றமை மகிழ்ச்சியளித்ததாக இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் இம்மாதம் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL), குமார் சங்கக்கார கிரிக்கெட் பணிப்பாளராக செயற்பட்டுவரும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் விளையாடவுள்ளார்.

பஞ்சாப் அணியின் புதிய தலைவராக மயங்க் அகர்வால் நியமனம்

ராஜஸ்தான் றோயல்ஸ் அணி ரவிச்சந்திரன் அஸ்வினை 5 கோடி ரூபாவுக்கு வாங்கியிருந்தது. இந்தநிலையில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சமுகவலைத்தள காணொளியொன்றில் குமார் சங்கக்கார தொடர்பில் அஸ்வின் கருத்து பகிர்ந்துள்ளார்.

அஸ்வின் குறிப்பிடுகையில், “நான் சங்காவுக்கு எதிராக பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். நான் அவரை பலமுறை எதிர்த்து அதில் அவரை ஆட்டமிழக்கவும் செய்துள்ளேன். அவர் ஓய்வு பெற்றதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.

ஏனென்றால், சங்கக்கார போன்ற முன்னணி துடுப்பாட்ட வீரர்கள், ஒரே பந்துவீச்சாளருக்கு பலமுறை ஆட்டமிழக்கும்போது, ஒரு திட்டத்தை வகுத்து, ஓட்டங்களை பெறவேண்டும் என்ற தாகத்துடன் திரும்பி வருவார்கள். அவர்கள் உங்களைத் தாக்க முயற்சிப்பார்கள். ஒருபுறம் அவர் ஓய்வுபெற்றமை எனக்கு மகிழ்ச்சி. அவர் ஓய்வு பெறுவதாகச் சொன்னபோது, நான் அவருடன் மீண்டும் போட்டியிட வேண்டியதில்லை என்பதில் நான் கொஞ்சம் நிம்மதியடைந்தேன்” என்றார்.

IPL தொடருக்கான இந்த பருவகால போட்டிகள் எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இம்முறை தொடரில் 10 அணிகள் இரண்டு குழுக்களாக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<