பெண்களுக்கான மரதனில் ஹிருனியின் 2ஆவது அதிசிறந்த காலம்

113

இலங்கையின் தேசிய மரதன் ஓட்ட சம்பியனான ஹிருனி விஜயரட்ன, ஸ்பெய்னின் வெலன்சியா மரதன் ஓட்டப் போட்டியில் போட்டித் தூரத்தை 2 மணித்தியாலங்கள் 36.10 செக்கன்களில் நிறைவுசெய்து பெண்களுக்கான மரதன் ஓட்டத்தில் இலங்கையின் இரண்டாவது அதிசிறந்த காலத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தார். 

200 இற்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொண்ட குறித்த போட்டியில் ஹிருனி விஜயரட்ன, 32ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். 

பெண்களுக்கான மரதனில் புதிய தேசிய சாதனை படைத்த ஹிருனி

ஸ்பெய்னின் வெலன்சியா மரதன் ஓட்டப் போட்டி நேற்று (06) நடைபெற்றதுடன், இதில் உலகின் முன்னணி வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்

இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஹிருனி விஜயரட்ன, பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள் 26.16 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாவது தனது அதிசிறந்த காலத்தைப் பதிவு செய்தார்.

அமெரிக்காவில் கடந்த 2 தசாப்தங்களாக வாழ்ந்து வருகின்ற ஹிருனி விஜயரட்ன கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஜேர்மனியின் டஸல்டோர்ப் (Dusseldorf) மரதன் ஓட்டப் போட்டியினை 2 மணித்தியாலம் 34.10 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டு பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளில் தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

இந்த நிலையில், ஸ்பெய்னின் வெலன்சியா மரதன் ஓட்டப் போட்டியில் பெற்றுக்கொண்ட அடைவு மட்டம் குறித்து ஹிருனி விஜயரட்ன, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

“இறுதியாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவுக்குப் பிறகு முதல்தடவையாக மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றினேன். இது நான் எதிர்பார்த்ததெல்லாம் இல்லை. 

பெண்களுக்கான 5 ஆயிரம் மீற்றரில் இலங்கை சாதனை படைத்த ஹிருனி

ஆனால், இது ஒரு பெரிய தனிப்பட்ட வெற்றியாகும். நான் எனது இரண்டாவது சிறந்த நேரத்தையும், எனது சொந்த சாதனைக்குப் பிறகு இலங்கை வீராங்கனை ஒருவரினால் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது சிறந்த நேரத்தையும் ஓடினேன்

துன்பங்கள், கடினமான காலங்கள் மற்றும் எதிர்பாராத தடைகள் நிறைந்த ஒரு ஆண்டில், இந்த மரதன் போட்டியை வெற்றிகரமாக நிறைவுசெய்ய கிடைத்தமை எனது பெருமை வாய்ந்த சாதனையாகும்.

இன்று நான் ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் போராடினேன், வீசும் காற்றோடு சண்டையிட்டேன், என் மன அரக்கர்களுடன் சண்டையிட்டேன், போட்டியை நிறுத்தக் காத்துக் கொண்டிருந்த கால்களுடன் சண்டையிட்டேன். நான் இலங்கை பிரஜை. நாங்கள் ஒருபோதும் கைவிடுவோம் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

ஓலிம்பிக் புலமைப்பரிசில் பட்டியலிலிருந்து விதூஷா, கயன்திகா நீக்கம்

முன்னைய வருடங்களில் எனது நேரத்தை எடுத்தால், நான் டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றிருப்பேன். இன்று இல்லை. எனவே பயணம் தொடர்கிறது. 

வாழ்த்துக்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி! இந்த தருணங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நான் பாக்கியம் பெற்றவளாக இருக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.  

இறுதியாக, கடந்த டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக களமிறங்கிய ஹிருனி விஜயரட்ன, பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றரில் 4 ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

எனினும், பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமையைத் தேடிக் கொடுத்தார்

35 வருடகால தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை பெற்றுக் கொண்ட முதலாவது தங்கப் பதக்கமாக அது பதிவாகியது.

கொரோனாவினால் தேசிய விளையாட்டு விழா மீண்டும் ஒத்திவைப்பு

எனவே கொவிட் – 19 வைரஸ் காரணமாக தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்ற 31 வயதான ஹிருனி விஜயரட்ன, அடுத்த வருடம் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவை இலக்காக் கொண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, ஹிருனி விஜயரட்ன பங்குபற்றிய ஸ்பெய்னின் வெலன்சியா மரதன் ஓட்டப் போட்;டியில் பெண்கள் பிரிவில் கென்யாவின் பெரெஸ் ஜேச்சயேயும் (2.17.16), ஆண்கள் பிரிவில் கென்யாவின் எவன்ஸ் செபெட்டும் (2.03.00) தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<