ஆஷஷ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் சீன் அபோட் உபாதை காரணமாக விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செபீல்ட் சீல்ட் தொடரில் விக்டோரியா அணிக்கு எதிரான போட்டியின் போது நியூவ் சௌத் வேல்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஸ் ஹேஷல்வூட் மற்றும் சீன் அபோட் ஆகியோர் உபாதை காரணமாக களத்திலிருந்து வெளியேறினர்.
>>முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!<<
ஹேஷல்வூட்டின் வலது காலின் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக களத்திலிருந்து வெளியேறியிருந்தார். எனினும் பின்னர் ஆய்வு செய்ததில் இவர் போட்டிகளில் விளையாடுவதற்கான வைத்திய ஆலோசனை வழங்கப்பட்டது. எனவே தொடர்ந்து பயிற்சிகளில் இவர் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இடது கால் தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்திருந்த சீன் அபோட், ஆஷஷ் தொடரின் முதல் போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூவ் சௌத் வேல்ஸ் அணிக்காக விளையாடிய இவர் களத்திலிருந்து வெளியேறிய பின்னர், வைத்திய பரிசோதனைக்கு முகங்கொடுத்திருந்தார். இதன்போது இவருடைய உபாதை உறுதிசெய்யப்பட்டதையடுத்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் உபாதை காரணமாக ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளதுடன், ஸ்டீவ் ஸ்மித் தலைவராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















