இந்தியாவில் இம்மாதம் நடைபெறவுள்ள IPL தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்காக இந்தியா மற்றும் சர்வதேசத்திலிருந்து 1355 வீரர்கள் பதிவுசெய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
IPL வீரர்கள் ஏலம் இம்மாதம் 16ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபு தாபியில் நடைபெறவுள்ளது.
>>பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 7 இலங்கை வீரர்கள்<<
குறித்த இந்த ஏலத்துக்காக சர்வதேச ரீதியில் வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்திருந்தனர். இதில் 14 நாடுகளிலிருந்து மொத்தமாக 1355 வீரர்கள் பதிவுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இலங்கையைச் சேர்ந்த முன்னணி வீரர்களான வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன மற்றும் மதீஷ பதிரண ஆகியோர் தங்களுடைய குறைந்தபட்ச தொகையாக 2 கோடியை (இந்திய ரூபாய்) நிர்ணயம் செய்துள்ளனர்.
மேற்குறித்த இலங்கை வீரர்களுடன் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 45 வீரர்கள் தங்களுடைய அடிப்படை குறைந்தபட்ச தொகையாக 2 கோடியை நிர்ணயித்துள்ளனர்.
இம்முறை ஏலத்தை பொருத்தவரை அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த முன்னணி சகலதுறை வீரர் கிளேன் மெக்ஸ்வெல் தன்னுடைய பெயரை பதிவுசெய்யவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதேநேரம் தென்னாபிரிக்காவின் முன்னணி சகலதுறை வீரர் பெப் டு பிளெசிஸ் ஏற்கனவே ஏலத்திலிருந்து விலகியிருந்தார்.
IPL ஏலத்துக்கு முன்னர் 10 அணிகளாலும் மொத்தமாக 177 வீரர்கள் ஏற்கனவே தக்கவைக்கப்பட்டுள்ளனர். எனவே 77 வீரர்களை அணிகள் ஏலத்தில் வாங்கமுடியும் என்பதுடன், இதில் 31 வெளிநாட்டு வீரர்களுக்கான வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















