தனது உயிரினை மாய்த்துக் கொண்ட இங்கிலாந்து துடுப்பாட்ட நட்சத்திரம்

74
Graham Thorpe

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர மத்திய வரிசைத் துடுப்பாட்டவீரரான கிரஹம் தோர்பே தனது உயிரை தானாகவே மாய்த்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

>>ஐ.சி.சி. இன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக சாமரி அதபத்து<<

கிரஹம் தோர்பே கடந்த 05ஆம் திகதி மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகின. எனினும் தற்போது கிரஹம் தோர்பேவின் மனைவி வெளியிட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் அவர் தற்கொலை மூலம் தனது உயிரினை மாய்த்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது 

54 வயது நிரம்பிய கிரஹம் தோர்பே கடந்த இரண்டு வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுவதோடு, அவர் இதற்கு முன்னரும் உயிரை மாய்ப்பதற்கான முயற்சிகளில் ஒரு தடவை ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.   

இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகள் அடங்கலாக 182 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கும் கிரஹம் தோர்பே 16 சதங்கள் அடங்கலாக 9,000 இற்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றதனை அடுத்து தோர்பே இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராகவும் செயற்பட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<