அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரும், சகலதுறை வீரருமான கிளேன் மெக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
கிளேன் மெக்ஸ்வெல் கிளேன் மெக்ஸ்வெல் T20 போட்டிகளில் தன்னுடைய கவனத்தை முழுமையாக செலுத்த எதிர்பார்ப்பதன் காரணமாக ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
>>இந்திய கிரிக்கெட் அணி களத்தடுப்பு பயிற்சியாளருக்கு பதவி நீடிப்பு<<
கிளேன் மெக்ஸ்வெல் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டுவரை 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3990 ஓட்டங்கள் மற்றும் 77 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
இவருடைய ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிதான் அதிசிறந்த மைல்கல்லாக பார்க்கப்பட்டது.
குறித்த இந்தப் போட்டியில் தடுமாறிய அவுஸ்திரேலிய அணிக்காக 201 ஓட்டங்களை விளாசி அணிக்கு முக்கியமான வெற்றியொன்றினை பதிவுசெய்துக்கொடுத்தார்.
அதுமாத்திரமின்றி 2015 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அணி உலகக்கிண்ணத்தை வென்ற அணியிலும் கிளேன் மெக்ஸ்வெல் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<