LPL வீரர்கள் வரைவில் கெயில், டு பிளசிஸ், ரசல், அப்ரிடி உட்பட 74 வெளிநாட்டு வீரர்கள்

Lanka Premier League 2021

681
 

இலங்கையில் இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்காக பதிவுசெய்துள்ள சர்வதேச வீரர்களின் பட்டியலை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

LPL தொடருக்கான வீரர்கள் பதிவு கடந்த 25ம் திகதி முதல் ஆரம்பமானதுடன், 7ம் திகதி நிறைவுக்கு வந்தது.

T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் 4 மாற்றங்கள்!

எதிர்வரும் டிசம்பர் 05 முதல் 23ம் திகதிவரை நடைபெறவுள்ள LPL  தொடருக்காக மொத்தமாக 699 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்தவகையில், இலங்கை கிரிக்கெட் சபை தெரிவுசெய்துள்ள 225 வீரர்கள், வீரர்கள் வரைவில் இடம்பெறவுள்ளனர். இந்த வீரர்கள் வரைவு இம்மாதம் 27ம் திகதி நடைபெறவுள்ளதுடன், இதில் 74 சர்வதேச வீரர்களின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

LPL அணியொன்று அதிகபட்சமா 6 வெளிநாட்டு வீரர்களை இணைக்க முடியும் என்பதுடன், மொத்தமாக 20 வீரர்கள் குழாத்தில் இடம்பெறமுடியும்.

அந்தவகையில், கீழ் காணும் வீரர்கள் இம்முறை LPL தொடருக்காக பதிவுசெய்துள்ளனர்.

ஜிம்பாப்வே – சிக்கண்டர் ரஷா, கிரைக் இர்வின், சீன் வில்லியம்ஸ்

மே.தீவுகள் – கிரிஸ் கெயில், டுவைன் ஸ்மித், தினேஷ் ராம்தீன், ரொஸ்டன் சேஸ், ஜொன்ஸன் சார்ல்ஸ், கெமார் ரோச், ஷேய் ஹோப், கீரன் பவெல், ரகீம் கொர்ன்வல், பீடல் எட்வர்ட்ஸ், செல்டன் கொட்ரல், பெபியன் எலன், செட்விக் வோல்டன், அன்ரே ரசல், லெண்ட்ல் சிம்மன்ஸ், ஜெரோம் டெய்லர், கார்லோஸ் பிராத்வைட், ஷிம்ரொன் ஹெட்மையர், அல்ஷாரி ஜோஷப்

பங்களாதேஷ் – மெஹிதி ஹாஷன், சோஹக் காஷி, ஷபியுல் இஸ்லாம், அபிப் ஹுசைன், டஸ்கின் அஹ்மட், இம்ருல் கைஸ், எபடட் ஹுசைன், மொஹமட் மஹ்முல்லாஹ்

பாகிஸ்தான் – அன்வர் அலி, மொஹமட் ஹபீஸ், பக்ஹர் ஷமான், மொஹமட் இர்பான், அஹமட் சேஷாட், சொஹைல் தன்வீர், இமாம்-உல்-ஹக், உமர் அக்மல், கம்ரன் அக்மல், சர்பராஷ் அஹமட், ஜுனைட் கான், உஸ்மான் ஷின்வாரி, ஹரிஸ் சொஹைல், ஷஹீட் அப்ரிடி, சொஹைப் மலிக், மொஹமட் ஆமிர், ஹஸன் அலி, வஹாப் ரியாஸ்

தென்னாபிரிக்கா – பியோர்ன் போர்டியுன், ரிச்சட் லெவி, வெயன் பார்னெல், டுவானே ஒலிவீர், இம்ரான் தாஹீர், பெப் டு பிளெசிஸ், ரஸ்ஸி வென் டர் டஸன், மோர்னே மோர்கல்

இந்தியா – யூசுப் பதான், இர்பான் பதான், வினய் குமார்

அவுஸ்திரேலியா – ஜேம்ஸ் போல்க்னர், கிரிஸ் லின்

இங்கிலாந்து – லோரி எவன்ஸ், லுக் ரைட், லியம் பிளங்கட், டேன் லோவ்ரன்ஸ், ஸ்மித் பட்டேன், ஸ்டீவ் பின், டேவிட் மலான், ஆதில் ரஷீட், செம் பில்லிங்ஸ், ஒல்லி ரொபின்ஸன், ரவி பொப்பாரா

நியூசிலாந்து – மிச்சல் மெக்லானகன், நெயில் புரூம்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…