இந்திய பயிற்சியாளர் – மைதானப் பராமரிப்பாளர் இடையே வாக்குவாதம்

20

இங்கிலாந்து – இந்திய அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும்  இறுதி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும், மைதானப் பராமரிப்பாளர் லீ போர்டிஸுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பரில் இலங்கை வரும் அவுஸ்திரேலிய U19 மகளிர் கிரிக்கெட் அணி

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது செவ்வாய் (29) ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஓவல் மைதானத்தில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஆடுகளத்தை (Wicket) ஆய்வு செய்யச் சென்ற இந்தியப் பயிற்சியாளர்களை, ஆடுகளத்திலிருந்து 2.5 மீட்டர் தள்ளி நிற்குமாறு போர்டிஸ் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது 

சாதாரண காலணிகளுடன் ஆடுகளத்தைப் பார்வையிட்ட தங்களை இவ்வாறு நடத்தியது ஆச்சரியத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியதாக இந்திய அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளர் சித்தான்சு கோடக் தெரிவித்தார். 

அதேநேரம் இந்த விடயத்திற்காக இந்திய அணி ஊழியரிடம் கடுமையாகப் பேசியதால் கோபமடைந்த இந்திய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், போர்டிஸிடம் நேரடியாகச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது 

ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஜஸ்ப்ரிட் பும்ரா நீக்கம்?

“நீங்கள் எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை, உங்களுக்கு அந்த உரிமை இல்லை. நீங்கள் ஒரு மைதான பராமரிப்பாளர், அதற்கு மேல் ஒன்றுமில்லை,” என்று கம்பீர் ஆவேசமாக கூறியதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன 

விடயங்கள் இவ்வாறு காணப்பட இந்த விடயம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட கோட்டக், மைதான பராமரிப்பாளர்கள் ஆடுகளத்தினை பாதுகாப்பதில் அதிக அக்கறையுடன் இருப்பது சாதாரணம் என்ற போதிலும் அதற்காக திமிருடன் நடந்து கொள்ளக் கூடாது எனத் தெரிவித்திருந்தார் 

இந்தச் சம்பவம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் இந்திய அணி சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்தப் புகாரும் வழங்கப்படவில்லை என்ற போதிலும் இந்த வாக்குவாதம், இங்கிலாந்துஇந்திய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டிக்கு முன்னதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<