நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான குழாத்திலிருந்து அவுஸ்திரேலிய அணியின் வீரர் கிளேன் மெக்ஸ்வெல் நீக்கப்பட்டுள்ளார்.
கிளேன் மெக்ஸ்வெல் நியூசிலாந்து தொடருக்காக இணைக்கப்பட்டிருந்தாலும், பயிற்சியின்போதும் இவருடைய கையில் பந்து தாக்கியதில் உபாதை ஏற்பட்டிருந்தது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்த கிறிஸ் வோக்ஸ்
பயிற்சியின் போது மெக்ஸ்வெல் மிச்சல் ஓவனுக்கு பந்துவீசிய போது, குறித்த பந்து நேரடியாக மெக்ஸ்வெலின் கையில் தாக்கியிருந்தது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இவருடைய கையில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டதையடுத்து அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
கிளேன் மெக்ஸ்வெல் அணியிலிருந்து நீக்கப்படடுள்ள நிலையில், ஜோஸ் பிலிப்பி அவுஸ்திரேலியா குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.
சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் நாளை புதன்கிழமை (01) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<