ஐ.சி.சியின் முக்கிய விருதுகளை அள்ளினார் கோஹ்லி

386
Sri Lanka vs India

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர் மற்றும் ஒரு நாள் வீரருக்கான விருதுகளை இந்திய அணியின் தலைவரும், நட்சத்திர வீரருமான விராத் கோஹ்லி பெற்றுக்கொண்டார்.

2017ஆம் ஆண்டுக்கான .சி.சியின் விருதுகள் விபரம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில் 2016 செப்டெம்பர் 21 முதல் 2017 டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் இவ்விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.

ஐ.சி.சியின் விதிமுறைகளை மீறிய கோஹ்லிக்கு அபராதம்

தென்னாபிரிக்க அணியுடன் தற்போது நடைபெற்று..

இதன்படி, கடந்த வருடம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி, வருடத்தின் சிறந்த ஒரு நாள் வீரருக்கான விருதைத் தட்டிச் சென்றதுடன், வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படுகின்ற சேர் கார்பில்ட் சோர்பஸ் விருதையும் பெற்றுக்கொண்டார். முன்னதாக 2012ஆம் ஆண்டும் இவ்விருதுகளை அவர் தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காலப்பகுதியில் டெஸ்ட் போட்டிகளில் 5 இரட்டைச் சதங்கள் மற்றும் 8 சதங்கள் உள்ளடங்கலாக 77.80 என்ற சராசரியுடன் 2,203 ஓட்டங்களை கோஹ்லி பெற்றுக் கொண்டார். அத்துடன், கடந்த வருடம் நடைபெற்ற 26 ஒரு நாள் போட்டிகளில் 6 சதங்களுடன் 1,818 ஓட்டங்களைக் குவித்த 29 வயதான கோஹ்லி, இதுவரை 202 ஒரு நாள் போட்டிகளில் 76.84 சராசரியுடன் 9,030 ஓட்டங்களையும் குவித்துள்ளார். இதில் 32 சதங்களும் உள்ளடங்கும்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் T-20 போட்டிகளில் 299 ஓட்டங்களைக் குவித்த கோஹ்லி, இந்திய அணிக்காக 9 தொடர் வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்த தலைவராகவும் வரலாற்றில் இடம்பிடித்தார்.

அதிலும் குறிப்பாக 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு .சி.சியின் சிறந்த ஒரு நாள் வீரருக்கான விருதை ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் பெற்றுக்கொள்கின்ற முதல் சந்தர்ப்பமாகவும் இது இடம்பிடித்தது. முன்னதாக 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் தென்னாபிரிக்காவின் .பி டிவ்லியர்ஸும், 2016இல் குயின்டன் டி கொக்கும் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன், 2017ஆம் ஆண்டின் .சி.சியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கனவு அணிகளின் தலைவராகவும் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும், .சி.சியின் டெஸ்ட் கனவு அணியில் கோஹ்லியுடன், புஜாரா மற்றும் அஷ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளதுடன், ஒரு நாள் கனவு அணியில் ரோஹித் சர்மாக மாத்திரம் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் மற்றுமொரு இளம் சுழற்பந்து வீச்சாளரான சஹால் சிறந்த T-20 வீரராகத் தெரிவாகியுள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிராக கடந்த வருடம் நடைபெற்ற T-20 போட்டியில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியிருந்தமை இவ்விருதைப் பெற்றுக்கொள்ள முக்கிய காரணமாக அமைந்தது. குறித்த விருதுக்கான பட்டியலில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான அசேல குணரத்னவும் இடம்பெற்றிருந்தார்.

பங்களாதேஷுடனான மோதலுக்கு அஞ்செலோ மெதிவ்ஸ் சந்தேகம்

தொடை எலும்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலி..

smith-marshஇந்நிலையில், .சி.சியின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் பெற்றுக்கொண்டார். குறித்த காலப்பகுதியில் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த ஸ்மித், 8 சதங்கள், 5 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 1,875 ஓட்டங்களைக் குவித்தார்.

இதேவேளை, கடந்த வருடம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் 13 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி பாகிஸ்தானுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாக இருந்த அவ்வணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி, .சி.சியின் சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.

.சி.சியின் ஒரு நாள் பந்து வீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள 23 வயதான ஹசன் அலி, கடந்த வருடத்தில் மாத்திரம் 43 ஒரு நாள் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

அண்மைக்காலமாக கிரிக்கெட் அரங்கில் பல முன்னணி அணிகளுக்கு எதிராக வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற ஆப்கானிஸ்தான் அணியின் 19 வயதுடைய இளம் சுழற்பந்து வீச்சாளராக ராஷித் கான், .சி.சியின் அங்கத்துவ நாடுகளின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார். அவர் கடந்த வருடம் 43 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 60 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 தொடருக்காக பங்களாதேஷுக்கு அழைப்பு

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்..

அத்துடன், வருடத்தின் சிறந்த நடுவருக்கான டேவிட் செப்பர்ட் விருதை தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த மராயஸ் இராஸ்மஸ் தொடர்ச்சியாக 2ஆவது தடவையாகவும் பெற்றுக்கொண்டார். 2010ஆம் ஆண்டு முதல் .சி.சியின் சிறந்த நடுவர் குழாமில் இடம்பெற்று வருகின்ற அவர், இதுவரை 47 டெஸ்ட், 74 ஒரு நாள் மற்றும் 26 T-20 போட்டிகளில் நடுவராகச் செயற்பட்டுள்ளார்.

.சி.சியின் டெஸ்ட் அணி

டீன் எல்கர்(தென்னாபிரிக்கா), டேவிட் வோர்னர்(அவுஸ்திரேலியா), விராத் கோஹ்லி(இந்தியா- தலைவர்), ஸ்டீவ் ஸ்மித்(அவுஸ்திரேலியா), செதெஸ்வர் புஜாரா(இந்தியா), பென் ஸ்டோக்ஸ்(இங்கிலாந்து), குயின்டன் டி கொக்(தென்னாபிரிக்கா), ரவிச்சந்திரன் அஷ்வின்(இந்தியா), மிட்செல் ஸ்டார்க்(அவுஸ்திரேலியா), கங்கிசோ ரபாடா(தென்னாபிரிக்கா), ஜிம்மி அண்டர்சன்(இங்கிலாந்து)

.சி.சியின் ஒரு நாள் அணி

டேவிட் வோர்னர்(அவுஸ்திரேலியா), ரோஹித் சர்மா(இந்தியா), விராத் கோஹ்லி(இந்தியா- தலைவர்), பாபர் அசாம்(பாகிஸ்தான்), ஏ.பி.டிவில்லியர்ஸ்(தென்னாபிரிக்கா), குயின்டன் டி கொக்(தென்னாபிரிக்கா), பென் ஸ்டோக்ஸ்(இங்கிலாந்து), ட்ரென்ட் போல்ட்(நியூசிலாந்து), ஹசன் அலி(பாகிஸ்தான்), ராஷிட் கான்(ஆப்கானிஸ்தான்), ஜெஸ்பிரிட் பும்ரா(இந்தியா)