இலங்கையிலிருந்து சரக்கு விமானத்தில் சென்ற பாக். வீரர்கள்

85

இலங்கையின் உன்ளூர் முதல்தர கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வந்து, கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் நிர்க்கதியாகியிருந்த ஐந்து பாகிஸ்தான் வீரர்களை மீண்டும் திருப்பி அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரலாயத்தின் தலையீட்டினால் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான பொருட்கள் (சரக்கு) போக்குவரத்து விமானத்தில் கடந்த 28ஆம் திகதி மாலை 6.54 மணியளவில் இவர்கள் பாகிஸ்தான் நோக்கி பயணமாகியுள்ளனர்

உமர் அக்மலின் போட்டித் தடை குறித்து கம்ரான் அக்மல் ஆவேசம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட மூன்று வருடகால போட்டித்..

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளில் உள்ள விளையாட்டு போட்டிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் என அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையிலும் பரவத் தொடங்கின. இதன் காரணமாக இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவிருந்த டெஸ்ட் தொடர் இரத்து செய்யப்பட்டது

இதனைத்தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வந்த முதல்தர கழகங்களுக்கிடையிலான ப்ரீமியர் லீக் போட்டித் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன

இந்த நிலையில், உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் விளையாடுவதற்காக 17 பாகிஸ்தான் வீரர்கள் கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.இதில் 7 பேர் கடந்த மார்ச் மாதம் முற்பகுதியில் நாடு திரும்பியிருந்தனர்

இதனிடையே, கொரோனா வைரஸினால் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டதன் காரணமாக எஞ்சிய 10 பாகிஸ்தான் வீரர்களுக்கும் பாகிஸ்தான் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  

இருப்பினும், குறித்த வீரர்களுக்கான உணவு உள்ளிட்ட தங்குமிட வசதிகளை உரிய விளையாட்டு கழகங்கள் செய்து கொடுத்திருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம், குறித்த வீரர்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரலாயத்தின் தலையீட்டினால் அலி மாஹிர் (காலி கிரிக்கெட் கழகம்), அஹ்ஸன் பேக் (தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்), மொஹதஷிம் அலி (களுத்துறை கிரிக்கெட் கழகம்), காசிப் நவீட் (பாணந்துறை கிரிக்கெட் கழகம்) மற்றும் கைசர் ஷ்ரப் (நுகெகொட கிரிக்கெட் கழகம்) உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் பாகிஸ்தானை சென்றடைந்தனர்

ஓய்வு பெறும் பாகிஸ்தானின் மகளிர் கிரிக்கெட் நட்சத்திரம்

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியும், சகலதுறை..

இந்த நிலையில், எஞ்சிய ஐந்து வீரர்களையும் மிக விரைவில் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தன்வீர் தெரிவித்தார்.  

இதன்படி, ஷார் அட்டாரி (பாணந்துறை கிரிக்கெட் கழகம்), பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மன்சூர் இலாஹியின் மகன் அலி மன்சூர் (களுத்துறை கிரிக்கெட் கழகம்), பைசான் கான் (தமிழ் யூனியன் கழகம்), ஆபித் ஹஸன் (காலி கிரிக்கெட் கழகம்) மற்றும் பாசித் அலி உள்ளிட்ட வீரர்கள் தொடர்ந்து இலங்கையில் தங்கியுள்ளதுடன், இவர்களுக்கான பயண ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<