இங்கிலாந்து எல்லா கோணங்களிலும் சிறப்பாக ஆடியது: வில்லியம்சன்

263
©GETTY IMAGES

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 41ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து வீரர்களை 119 ஓட்டங்களால் தோற்கடித்திருந்தது.  இரு அணிகளுக்கும் கடைசி லீக் போட்டியாக அமைந்த இந்த மோதல் மூலம் இங்கிலாந்து இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவாகிய மூன்றாவது அணியாகவும் மாறிக் கொண்டது. 

நியூசிலாந்து வெற்றியுடன் உலகக் கிண்ண அரையிறுதிக்கு செல்லும் இங்கிலாந்து அணி

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 41………..

இதேநேரம், இங்கிலாந்து அணியின் இந்த வெற்றி காரணமாக இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் மூன்றாவது தோல்வியினை பதிவு செய்து கொண்ட நியூசிலாந்து அணி, தமது உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய, வெள்ளிக்கிழமை (05) இடம்பெறவுள்ள பாகிஸ்தான் அணியின் கடைசி லீக் போட்டியினை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலைமையும் காணப்படுகின்றது

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் தோல்வி குறித்து போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த அதன் தலைவர் கேன் வில்லியம்சன், நியூசிலாந்துஇங்கிலாந்து போட்டி இடம்பெற்ற மைதானம் துடுப்பாட சற்று கடினமாக இருந்த போதிலும் நியூசிலாந்து அணி வீரர்கள் சாமர்த்தியமான முறையில் கிரிக்கெட் ஆடியிருக்க வேண்டும் என கவலையுடன் குறிப்பிட்டிருந்தார்

இரண்டாம் பகுதிக்கு செல்லும் போது, எங்களுக்கு இரண்டு பெரிய இணைப்பாட்டங்கள் தேவையாக இருந்தது. ஆனால், எமது அணியின் முன்வரிசையில் இருந்து அது கிடைத்திருக்கவில்லை. இதேநேரம், உங்களுக்கு இந்த ஆடுகளம் துடுப்பாட சற்று கடினமானது என்பது தெரியும். ஆனாலும் ஒரு துடுப்பாட்ட தொகுதியாக, போட்டியினை வெற்றி பெறும் கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்க வேண்டும். நாம் அதனை செய்வதற்கு தவறிவிட்டோம்.” 

Video – நம்பிக்கையுடன் நகரும் இலங்கை அணியின் அடுத்தக்கட்டம் என்ன? Cricket Kalam 21

இலங்கை கிரிக்கெட் அணியின் வெளியேற்றம்……….

“(தற்போது) நாங்கள் எங்களது கிரிக்கெட் விளையாட்டு எந்த இடத்தில் முன்னேற வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டு இருக்கின்றோம். இப்பொழுது எந்த சந்தேகங்களுமின்றி, இப்படியான கடினமான நிலைமைகளில் சாமர்த்தியமான கிரிக்கெட் விளையாட்டு ஆடுவதே சிறப்பாக இருக்கும். இப்படியான கடின நிலைகள் கொண்ட ஆடுகளங்களில் நாம் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் எமக்கு முக்கியமான பாடங்களாகும். இவற்றை குறிப்பாக (Note) எடுத்து கடினமான ஆடுகளங்கள் கொண்ட இடங்களில் நல்ல முறையில் ஆட முயல்வோம்.” என கேன் வில்லியம்சன் கூறியிருந்தார்.

நியூசிலாந்து அணியுடனான போட்டியில் இங்கிலாந்து அணியும் துடுப்பாடி வந்த போது ஆடுகள நிலைமைகள் காரணமாக ஒரு கட்டத்தில் சரிவினை நோக்கியிருந்தது. எனினும், இங்கிலாந்து அணிக்காக ஜொன்னி பெயர்ஸ்டோவ், ஜேசன் ரோய் ஆகியோர் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தமது தரப்பினை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர்

அது (ஆடுகளத்தின் இயற்கையான தன்மை) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸிலும் மாற்றத்தினை ஏற்படுத்தி விட்டது. அவர்கள் அவர்களுக்கு வாய்ப்பு ஒன்று கிடைத்த போது, ஆடுகள நிலைமைகளை கருத்திற் கொள்ளாமல் மிகவும் சிறப்பாக ஆடினர். இதனால், அவர்களுக்கு எங்களை அதிக அழுத்தங்களுக்கு இலகுவாக உள்ளாக்கி வெற்றி பெற முடிந்தது. நான் எண்ணுவதன்படி, பின்னால் வந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு மிகவும் கடினமான நிலைமைகள் இருந்ததே, எங்களுக்கு வெற்றியினை சுவைக்க முடியாமல் ஆக்கிவிட்டது.” 

சதங்களில் சங்கக்காரவின் சாதனையை சமப்படுத்திய ரோஹித் சர்மா

ஒரே உலகக் கிண்ணத் தொடரில் நான்கு சதங்கள் ………..

இதேவேளை நியூசிலாந்து அணி, இந்த உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தெரிவாகி ஆடினால் அப்போது தமது வீரர்கள் கடந்த கால முடிவுகளை நினைத்து கவலை கொள்ளாமல் திறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும் என கேன் வில்லியம்சன் குறிப்பிட்டிருந்தார்.

நொக்அவுட் நிலையாக உள்ள அரையிறுதி போட்டி இடம்பெறும் நாளில் எது வேண்டுமானாலும் இடம்பெற முடியும். எங்களது நிலைப்பாட்டின் படி, நாங்கள் (இந்த உலகக் கிண்ணத்தில்) எங்களது சிறந்த ஆட்டத்தினை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றே நம்புகின்றோம். நாங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தும் போது எங்களுக்கு யாரை வேண்டுமானாலும் வீழ்த்தும் சந்தர்ப்பம் காணப்படும். அதிஷ்டவசமாக அரையிறுதி போட்டியில் ஆடுவோம் எனில், நாங்கள் ஒரு ஓய்வு இடைவெளி எடுத்து எங்களது வீரர்களை பயிற்சிகள் மூலமும், புத்துணர்ச்சி மூலமும்  பழைய நிலைக்கு மாற்றுவோம். அதனால், எங்களுக்கு (அரையிறுதி சுற்றில்) அழுத்தங்கள் இன்றி சுதந்திரமாக ஆட முடியும்.” என்றார்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<