அடுத்த மூன்று பருவங்களுக்குமான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிகளை நடாத்துவதற்கான சந்தர்ப்பம் இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு (ECB) வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகும் கிளன் பிலிப்ஸ்
அதன்படி இங்கிலாந்து கிரிக்கெட் சபையானது 2027, 2029 மற்றும் 2031ஆம் ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடாத்தும் வாய்ப்பினை தற்போது பெற்றுக் கொண்டுள்ளது.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முந்தைய இறுதிப் போட்டிகளை சிறப்பாக நடாத்தி முடித்த பதிவுகளைக் கொண்டிருப்பதன் காரணமாகவே இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு அடுத்த மூன்று இறுதிப் போட்டிகளுக்குமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஐ.சி.சி. இன் ஆண்டு நிர்வாக கூட்டத் தொடர் நேற்று (20) சிங்கப்பூரில் நிறைவுக்கு வந்த நிலையில் குறிப்பிட்ட கூட்டத் தொடரின் போதே, இங்கிலாந்துக்கு ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியினை நடாத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதேநேரம் ஐ.சி.சி. ஆண்டுக் கூட்டத் தொடரில் ஆப்கானில் இருந்து புலம் பெயர்ந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஆதரவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டமொன்று இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கிரிக்கெட் சபைகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமுனையில் ஐ.சி.சி. ஐ.சி.சி. ஆண்டுக் கூட்டத் தொடரின் போது டிமோர் லெஸ்ட்சே, மற்றும் ஷாம்பியா ஆகிய நாடுகள் ஐ.சி.சி. இன் புதிய அங்கத்துவ நாடுகளாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<