டெஸ்ட் துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் முன்னிலை அடைந்த திமுத் கருணாரட்ன

404

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC), டெஸ்ட் துடுப்பாட்டவீரர்களுக்காக வெளியிட்டிருக்கும் புதிய தரவரிசையில் இலங்கை டெஸ்ட் அணியின்  தலைவரான திமுத் கருணாரட்ன 5ஆம் இடத்தினைப் பெற்றிருக்கின்றார்.

>>WATCH – WHITEWASH தோல்வியும்; இலங்கை செய்ய வேண்டிய மாற்றங்களும்! |Sports RoundUp – Epi 198

ஏற்கனவே டெஸ்ட் துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் 8ஆம் இடத்தில் காணப்பட்டிருந்த திமுத் கருணாரட்ன, தற்போது 3 இடங்கள் முன்னேறிய நிலையிலையே 781 போட்டிகளுடன் 5ஆம் இடத்தினைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

திமுத் கருணாரட்ன நடைபெற்று முடிந்த இந்திய இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் அசத்தலான சதம் ஒன்றினைப் பெற்றிருந்ததே அவரின் தரவரிசை  முன்னேற்றத்திற்கு காரணமாக அமைகின்றது.

இதேநேரம் டெஸ்ட் துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்டவீரரான மார்னஸ் லபச்சேனே 936 புள்ளிகளுடன் தொடரந்தும் முதலிடத்தில் நீடிக்க, இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைவர் ஜோ ரூட் 872 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றார்.

மறுமுனையில் அவுஸ்திரேலிய அணியின் மற்றுமொரு நட்சத்திரவீரரான ஸ்டீவ் ஸ்மித், தொடர்ந்தும் 851 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் காணப்பட நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 844 ஓட்டங்களுடன் நான்காம் இடத்தில் காணப்படுகின்றார்.

அதேநேரம் பாகிஸ்தானின் டெஸ்ட் அணித்தலைவரான பாபர் அசாமும், டெஸ்ட் தரவரிசைகளில் முன்னிலை பெற்றிருக்கின்றார். ஏற்கனவே 9ஆம் இடத்தில் காணப்பட்ட பாபர் அசாம், தற்போது ஒரு இடம் முன்னேறி  743 புள்ளிகளுடன் 8ஆம் இடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இந்திய அணியின் முன்னாள் தலைவரான விராட் கோலி, டெஸ்ட் துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் 4 இடங்களை இழந்து தற்போது 742 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருக்கின்றார். விராட் கோலி தவிர இந்திய அணியின் ஏனைய வீரர்களான ரோஹிட் சர்மா (754 புள்ளிகளுடன்) 6ஆம் இடத்திலும், ரிசாப் பாண்ட் (738 புள்ளிகளுடன்) 10ஆம் இடத்திலும் காணப்படுகின்றனர்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<