கவுண்டி அணிக்காக ஆடவுள்ள திமுத் கருணாரட்ன

192
 

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவரான திமுத் கருணாரட்னவினை, இங்கிலாந்தின் கவுண்டி அணியான நொட்டிங்ஹம்ப்ஷைர் ஒப்பந்தம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இலங்கை கொவிட்-19 வைரஸ் அச்சத்திற்கு உள்ளான ஆபத்தான நாடு என இங்கிலாந்தினால் அறிவிக்கப்பட்டிருப்பதால் திமுத் கருணாரட்ன தனது வீசா விடயங்களையும், கொவிட்-19 வைரஸ் தொடர்பான பரிசோதனைகளையும் சரிசெய்து இங்கிலாந்து நோக்கி உடனடியாக பயணமாகினால் மாத்திரமே அவருக்கு நொட்டிங்ஹம்ப்ஷைர் அணியில் இணையும் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தப் பருவகாலத்திற்கான இங்கிலாந்தின் கவுண்டி சம்பியன்ஷிப் இம்மாதம் 30ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், அவ்வணிக்கு 04 போட்டிகள் எஞ்சியிருக்கின்றன.

CPL தொடரிலிருந்து விலகும் வனிந்து ஹசரங்க

எனவே, திமுத் கருணாரட்ன இங்கிலாந்து பயணமாகும் பட்சத்தில் குறித்த போட்டிகளில் நொட்டிங்ஹம்ப்ஷைர் அணிக்கு துடுப்பாட்டவீரராக பலம் சேர்ப்பார் என நம்பப்படுகின்றது.

அதேநேரம், திமுத் கருணாரட்ன நொட்டிங்ஹம்ப்ஷைர் அணியில் இணைந்தால் அவர் இலங்கையில் இருந்து குறித்த அணியில் இணைந்த இரண்டாவது வீரராக மாறும் கெளரவத்தினை பெற்றுக்கொள்விருப்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, இலங்கையினைச் சேர்ந்த மணிக்கட்டு சுழல்வீரரான காமினி குணசேன மாத்திரமே நொட்டிங்ஹம்ப்ஷைர் அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<