இந்தப் பருவத்திற்காக நடைபெற்று வரும் டயலொக் பாடசாலைகள் ரக்பி (DSR) தொடரின் (டிவிஷன் – II அணிகளுக்கான) இரண்டாம் சுற்று மோதலில் மடவளை மதீனா கல்லூரி அணியானது, ருவன்வெல்ல மத்திய கல்லூரிக்கு எதிராக 50-00 என்கிற புள்ளிகள் அடிப்படையில் அசத்தல் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் செல்லும் இலங்கை குழாம் அறிவிப்பு
திகன மாகாண விளையாட்டுத் தொகுதியில் சனிக்கிழமை (12) மாலை மடவளை மதீனா கல்லூரி மற்றும் ருவன்வெல்ல மத்திய கல்லூரிகள் இடையிலான மோதல் நடைபெற்றது.
இப்போட்டியில் தமது இறுதி இரண்டு போட்டிகளிலும் கேகாலு வித்தியாலயம், மற்றும் கொழும்பு டட்லி சேனநாயக்க கல்லூரி ஆகியவற்றுக்காக அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்திருந்த மடவளை மதீனா அணியினர் ருவன்வெல்ல மத்திய கல்லூரி அணியினை எதிர் கொண்டிருந்தனர்.
இந்தப் போட்டியின் முதல் பாதியில் மதீனா கல்லூரி வீரர்கள் அபாரம் காண்பித்த நிலையில், முதல் பாதியானது 29-00 என்கிற நிலையில் நிறைவுக்கு வந்தது.
இரண்டாவது பாதியிலும் தமது ஆதிக்கத்தினை முன்னெடுத்த இப்பாதியில் மேலதிகமாக 21 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டதுடன் இரண்டாம் பாதியிலும் ருவன்வெல்ல மத்திய கல்லூரி அணிக்கு மதீனா அணியின் பின்களத்தினை தாண்டி புள்ளிகள் பெற முடியாத நிலை காணப்பட்டிருந்தது. இதனால் போட்டியில் 50-00 என மடவளை மதீனா கல்லூரி அணியானது அபார வெற்றியினைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்க<<