கண்டியை வீழ்த்தி தொடர் வெற்றிகளை குவிக்கும் CH&FC

65
Dialog Rugby League

முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் 12வது வாரத்துக்கான போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன. தொடரின் இரண்டாவது கட்டத்துக்கான இந்த வார போட்டிகளில், CH&FC, அணி, கண்டி அணியை தங்களுடைய சொந்த மைதானத்தில் வீழ்த்தி தொடர் வெற்றிகளை குவித்து வருவதுடன், ஹெவ்லொக்ஸ் விளையாட்டு கழகம், CR&FC மற்றும் இராணுவப்படை விளையாட்டு கழகம் ஆகிய அணிகள் தங்களுடைய வெற்றிகளை பதிவு செய்துள்ளன.

தொடர்ச்சியாக ஆறு வெற்றிகளை குவித்துள்ள CH&FC

முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான..

  • CR&FC எதிர் கடற்படை விளையாட்டு கழகம்

தங்களுடைய சொந்த மைதானத்தில் கடற்படை அணியை எதிர்கொண்ட CR&FC அணி, 23-20 என்ற புள்ளிகள் கணக்கில் த்ரில் வெற்றியை பெற்றுக்கொண்டது. ஆட்டத்தின் முதற்பாதியில் கடற்படை அணி 17-13 புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

எனினும், இரண்டாவது பாதியில் சொந்த மைதானத்தின் சாதகத் தன்மைகளை பயன்படுத்தி, அபாரமாக ஆடிய CR&FC அணி 23-20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டியது. CR&FC அணி மொத்தமாக 3 ட்ரைகள், ஒரு கன்வேர்சன் மற்றும் 2 பெனால்டிகளை பெற்றுக் கொண்டதுடன், கடற்படை அணி 2 ட்ரைகள், 3 கன்வேர்சன்கள் மற்றும் ஒரு பெனால்டியுடன் 20 புள்ளிகளை பெற்றது.

  • விமானப்படை விளையாட்டு கழகம் எதிர் இராணுவப்படை விளையாட்டு கழகம்

வெலிசறை மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதற்பாதியின் முன்னேற்றம் காரணமாக இராணுவப்படை அணி 27-15 புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டியின் முதற்பாதியில் இராணுவப்படை அணி 24 புள்ளிகளை குவிக்க, விமானப்படை அணி 10 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது. தொடர்ந்து ஆரம்பமாகிய இரண்டாவது பாதியில் 3 புள்ளிகளை மேலதிகமாக இராணுவப்படை அணி பெற்றுக்கொள்ள, 27-15 புள்ளிகள் கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.

  • CH&FC எதிர் கண்டி விளையாட்டு கழகம்

CH&FC அணி தங்களுடைய சொந்த மைதானத்தில் கண்டி விளையாட்டு கழகத்தினை எதிர்கொண்டு விளையாடிய போட்டியானது இந்த வாரத்தின் முக்கியமாக போட்டியாக அமைந்திருந்தது.

இந்த பருவகாலத்தில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வந்த கண்டி அணி, CH&FC அணியிடம், பருவகாலத்தின் இரண்டாவது தோல்வியை சந்தித்தது. போட்டியின் முதற்பாதியிலிருந்து சிறப்பாக ஆடிய CH&FC அணி 16-07 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் புள்ளிகளை குவித்த CH&FC அணி 33-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை தக்கவைத்தது. CH&FC அணியின் இந்த வெற்றியானது இந்த பருவகாலத்தில் அவர்களின் 7வது தொடர்ச்சியான வெற்றியென்பது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பான போட்டியில் கடற்படையை வீழ்த்திய இராணுவம்

முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான..

  • ஹெவ்வொலக்ஸ் விளையாட்டு கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டு கழகம்

டயலொக் கழக றக்பி தொடரின் தொடர் வெற்றிகளை குவித்து வரும் ஹெவ்லொக்ஸ் விளையாட்டு கழகம், தங்களுடைய இந்தவார போட்டியில் பொலிஸ் விளையாட்டு கழகத்தை 35-26 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

முதற்பாதியில் இரண்டு அணிகளும் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஹெவ்லொக்ஸ் அணி 21-19 என்ற 2 புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது. எனினும், இரண்டாவது பாதியில் முன்னேற்றம் கண்ட ஹெவ்லொக்ஸ் அணி 14 புள்ளிகளை மேலதிகமாக பெற, பொலிஸ் அணி மேலதிகமாக 6 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது.