டோக்கியோ பாராலிம்பிக் இலங்கை அணிக்கு டயலொக் அனுசரணை

Tokyo Paralympics Games - 2021

150

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றவுள்ள இலங்கை அணிக்கு இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டா நிறுவனம் பூரண அனுசரணை வழங்கவுள்ளது.

டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது

டோக்கியோ பாராலிம்பிக்கில் இலங்கையிலிருந்து 9 வீரர்கள் பங்கேற்பு

இம்முறை பாராலிம்பிக்கில் இலங்கையிலிருந்து ஒன்பது வீர வீராங்ககைகள் பங்குபற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்

இந்த நிலையில், தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற அனைத்து வகையான பாராலிக்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டா நிறுவனம் கடந்த ஒரு தசாப்தங்களாக அனுசரணை வழங்கிவருகின்றது. 

அதனடிப்படையில் இம்முறை பாராலிம்பிக்கில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியின் பிரதான அனுசரணையாக டயலொக் ஆசியாட்டா நிறுவனம் செயல்படவுள்ளது

முன்னதாக, 2000ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய பாரா விளையாட்டு விழாவில் முதல்முறையாக இலங்கை பாரா அணிக்கு அனுசரணை வழங்கிய டயலொக், 2004, 2008 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாராலிம்பிக் விளையாட்டு விழாக்களில் பங்குகொண்ட இலங்கை பாரா அணியின் பிரதான அனுசரணையாளராக செயல்பட்டிருந்தது.  

இந்த நிலையில், இம்முறை டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியின் பிரதான அனுசரணையாளராக டயலொக் ஆசியாட்ட நிறுவனம் செயல்படவுள்ளதுடன், இதுதொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.

Photos: NPC Press Conference targetting Tokyo Paralympic Games

இதில் கலந்துகொண்டு பேசிய இலங்கை பாராலிம்பிக் சங்கத்தின் தலைவரும், டோக்கியோ பாராலிம்பிக் இலங்கை அணியின் பிரதானியுமான மேஜர் ஜெனரல் ராஜித் அம்பேமொஹொட்டி கருத்து தெரிவிக்கையில்,

2012 லண்டன், 2016 ரியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாக்களில் தலா ஒவ்வொரு பதக்கங்களை இலங்கை பாரா வீரர்கள் வெற்றி கொண்டனர். இந்த நிலையில், இம்முறை கொவிட்-19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் எமது வீரர்கள் டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே, இம்முறை பாராலிம்பிக்கில் எமது வீரர்கள் அதிக பதக்கங்களை வெல்வார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

அதேபோல, இம்முறை பாராலிம்பிக்கிலும் டயலொக் ஆசியாட்டா நிறுவனம் இலங்கை பாரா அணியின் பிரதான அனுசரணையாளராக செயல்படவுள்ளார்கள். உண்மையில் இது எமக்கு மிகப்பெரிய சக்தியைக் கொடுக்கவுள்ளது. அதற்கான நான் டயலொக் நிறுவனத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது இந்தப் பங்களிப்புக்கு நிச்சயம் எமது வீரர்கள் பதக்கம் வென்று நாட்டுக் கௌரவத்தை பெற்றுக்கொடுப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க மகேஷ் ஜயகொடி தகுதி

இதனிடையே, டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் ஊடக மற்றும் வர்த்தகப் பிரிவின் பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் பெரும்பாலான தேசிய விளையாட்டுக்களைப் போல பாராலிம்பிக் சங்கத்துடனும் கடந்த ஒரு தசாப்தங்களுக்கு மேலாக நாங்கள் இணைந்து செயல்படுவது தொடர்பில் பெருமைப்படுகிறோம். இலங்கையின் பாரா வீரர்களுக்கும் சர்வதேச மட்டப் போட்டிகளிலும் வெற்றிபெற முடியும் என்பதை கடந்த காலங்களில் நாங்கள் பார்த்து வருகிறோம்.

எனவே, 2020 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவிலும் எமது வீரர்கள் பதக்கம் வெல்ல வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன் என அவர் தெரிவித்தார்.

இலங்கையின் பிரதான தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டா நிறுவனம், இலங்கையின் கிரிக்கெட், ரக்பி, கரப்பந்து மற்றும் வலைப்பந்து ஆகிய அணிகளின் பிரதான அனுசரணையாளராக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க…