LPL தொடரில் புதிய உரிமையாளர்களைப் பெறும் தம்புள்ளை அணி

68

பங்களாதேஷ் தொழிலதிபர்களான தமீம் ரஹ்மான் மற்றும் கோலம் ரகீப் ஆகியோரினது Imperial Sports Group, புதிய பருவத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரில் தம்புள்ளை அணியின் உரிமையாளர்களாக மாறியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

டோனியை தாமதமாக களமிறக்குவதற்கான காரணம் என்ன? கூறும் பயிற்றுவிப்பாளர்!

அந்தவகையில் புதிய LPL T20 தொடரில் தம்புள்ளை அணியானது புதிய உரிமையாளர்களின் கீழ் தம்புள்ள தண்டர்ஸ் (Dambulla Thunders) என்னும் பெயரில் போட்டிகளில் பங்கேற்கும் எனக் கூறப்பட்டிருக்கின்றது 

Imperial Sports Group நிறுவனமானது ஐக்கிய இராச்சிய சந்தையினை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதோடு, இந்த நிறுவனத்தின் இணை ஸ்தாபகர்களில் ஒருவரான தமிம் ரஹ்மான் LPL தொடரில் புதிய அணியொன்றின் உரிமையாளர்களாக மாறியதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டிருக்கின்றார் 

அதேவேளை LPL தொடர் இயக்குனரான சமன்த தொடன்வெல புதிய உரிமையாளர்களுடன் இணைந்து பணி புரிவதில் தாம் எதிர்பார்ப்புடன் காணப்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கின்றார் 

இதேவேளை தம்புள்ளை தண்டர்ஸ் அணி தமது வீரர்கள் குழாத்தில் இணையும் முக்கிய வீரர்கள் குறித்த அறிவிப்பினை விரைவில் வெளியிடும் எனக் கூறப்பட்டிருக்கின்றது 

இந்த ஆண்டுக்கான LPL தொடரானது T20 உலகக் கிண்ணத்தின் நிறைவினை அடுத்து ஜூலை மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<