Home Cricket Domestic Cricket விறுவிறுப்பான போட்டியில் வெற்றியை தக்வைத்த தம்புள்ள வைகிங்!

விறுவிறுப்பான போட்டியில் வெற்றியை தக்வைத்த தம்புள்ள வைகிங்!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

122
Photo Courtesy : SLC

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் இன்று (5) நடைபெற்ற கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தம்புள்ள வைகிங் அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுக்கொண்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள வைகிங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 207 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு முதல் தோல்வி

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள வைகிங் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியில் அகில தனன்ஜயவுக்கு பதிலாக மிலிந்த சிறிவர்தன இணைக்கப்பட்டதுடன், தம்புள்ள வைகிங் அணியில் சச்சிந்து கொலம்பகேவுக்கு பதிலாக சுதீப் தியாகி இணைக்கப்பட்டிருந்தார்.

கோல் க்ளேடியேட்டர்ஸ் – தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ஷ (தலைவர்), தனன்ஜய லக்ஷான், அஷாம் கான், அஹ்சன் அலி, செட்விக் வோல்டன், செஹான் ஜயசூரிய, லக்ஷான் சந்தகன், மொஹமட் ஆமிர், மிலிந்த சிறிவர்தன, அசித பெர்னாண்டோ

தம்புள்ள வைகிங் – நிரோஷன் டிக்வெல்ல, உபுல் தரங்க, அஞ்செலோ பெரேரா, சமித் பட்டேல், தசுன் ஷானக (தலைவர்) சமியுல்லா ஷின்வாரி, அன்வர் அலி, ரமேஷ் மெண்டிஸ், மலிந்த புஷ்பகுமார, கசுன் ராஜித, சுதீப் தியாகி

நாணய சுழற்சியின் சாதகத்துடன் சிறப்பாக ஆடிய தம்புள்ள வைகிங் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 207 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

குறிப்பாக இந்த தொடரில் தம்புள்ள வைகிங் அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள், இந்தப் போட்டியில் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். உபுல் தரங்க 77 ஓட்டங்களையும், நிரோஷன் டிக்வெல்ல 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, தசுன் ஷானக 21 பந்துகளில் 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டத்தை சிறப்பாக நிறைவுசெய்ய உதவினார். பந்துவீச்சில் தனன்ஜய லக்ஷான் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. குறிப்பாக தனுஷ்க குணதிலக்க வழமைப்போல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அஷாம் கான் அரைச்சதம் கடந்த போதும், சரியான முறையில் போட்டியை நிறைவுசெய்ய தவறிய கோல் க்ளேடியேட்டரஸ் அணி வெறும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி சார்பாக தனுஷ்க குணதிலக்க அதிகபட்சமாக 78 ஓட்டங்களையும், அஷாம் கான் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, தம்புள்ள வைகிங் அணியின் பந்துவீச்சில் அன்வர் அலி மிகச்சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியுடன் தம்புள்ள வைகிங் அணி மொத்தமாக 4 போட்டிகளில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியதுடன், அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்தது. இதேவேளை, கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி தொடரில் தாங்கள் விளையாடிய சகல போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம் 

Result


Dambulla Aura
207/4 (20)

Galle Gladiators
198/7 (20)

Batsmen R B 4s 6s SR
Upul Tharanga c Dhananjaya Lakshan b Asitha Fernando 77 54 11 1 142.59
Niroshan Dickwella c Shehan Jayasuriya b Lakshan Sandakan 60 37 5 3 162.16
Dasun Shanaka c Mohammad Amir b Dhananjaya Lakshan 37 21 2 3 176.19
Samit Patel b Dhananjaya Lakshan 1 3 0 0 33.33
Samiullah Shinwari not out 9 5 2 0 180.00
Angelo Perera not out 9 3 0 1 300.00


Extras 14 (b 0 , lb 8 , nb 3, w 3, pen 0)
Total 207/4 (20 Overs, RR: 10.35)
Did not bat Ramesh Mendis, Anwar Ali, Malinda Pushpakumara, Sudeep Tyagi, Kasun Rajitha,

Bowling O M R W Econ
Mohammad Amir 4 0 23 0 5.75
Shehan Jayasuriya 3 0 28 0 9.33
Dhananjaya Lakshan 3 0 39 2 13.00
Danushka Gunathilaka 3 0 23 0 7.67
Asitha Fernando 4 0 56 1 14.00
Lakshan Sandakan 3 0 30 1 10.00


Batsmen R B 4s 6s SR
Danushka Gunathilaka c Angelo Perera b Anwar Ali 78 52 10 1 150.00
Ahsan Ali c Anwar Ali b Samit Patel 19 16 3 0 118.75
Bhanuka Rajapakse st Niroshan Dickwella b Ramesh Mendis 5 4 1 0 125.00
Azam Khan c Lahiru Madushanka b Dasun Shanaka 55 24 7 3 229.17
Chadwick Walton c Niroshan Dickwella b Anwar Ali 15 12 1 1 125.00
Shehan Jayasuriya c Ramesh Mendis b Anwar Ali 1 2 0 0 50.00
Milinda Siriwardane not out 13 9 1 1 144.44
Dhananjaya Lakshan lbw b Kasun Rajitha 0 1 0 0 0.00
Mohammad Amir not out 1 1 0 0 100.00


Extras 11 (b 0 , lb 4 , nb 1, w 6, pen 0)
Total 198/7 (20 Overs, RR: 9.9)
Did not bat Lakshan Sandakan, Asitha Fernando,

Bowling O M R W Econ
Anwar Ali 4 0 37 3 9.25
Kasun Rajitha 4 0 38 1 9.50
Sudeep Tyagi 1 0 23 0 23.00
Samit Patel 3 0 31 1 10.33
Ramesh Mendis 3 0 30 1 10.00
Samiullah Shinwari 1 0 13 0 13.00
Malinda Pushpakumara 2 0 26 0 13.00
Dasun Shanaka 2 0 10 1 5.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<