இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா

பொதுநலவாய விளையாட்டு விழா - 2022

137

இந்த ஆண்டு இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஓர் அங்கமாக மகளிருக்கான T20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், பொதுநலவாய விளையாட்டு விழா மகளிருக்கான T20 போட்டித் தொடரின் தகுதிகாண் போட்டிகள் மலேசியாவில் நடைபெறவுள்ளதுடன், இதில் பங்கேற்கவுள்ள சமரி அட்டபத்து தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் 9 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.

புதிய கொவிட்-19 திரிபினால் மகளிர் உலகக் கிண்ண வாய்ப்பினை இழந்த இலங்கை

இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள இந்த தகுதிகாண் சுற்றில் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா, கென்யா, மற்றும் ஸ்கெட்லாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகள் பங்குபற்றவுள்ளன.

இதில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, இம்மாதம் 19 ஆம் திகதி ஸ்கொட்லாந்தையும், 20 ஆம் திகதி கென்யாவையும், 22 ஆம் திகதி மலேசியாவையும், 24 ஆம் திகதி பங்களாதேஷ் அணியையும் சந்திக்கவுள்ளன.

இந்த நிலையில், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹஷான் திலகரட்னவுக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, அவர் தற்போது பயோ-பபுள் (Bio Bubble) வலையத்தில் இருந்து சிகிச்சைகளைப் பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஜிம்பாப்வேயில் அண்மையில் நடைபெற்ற ஐசிசி இன் மகளிருக்கான உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற பெரும்பாலான வீராங்கனைகள் தற்போது பயோ-பபுள் வலையத்தில் இருந்துகொண்டு பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.

U19 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணியுடன் இணையும் மஹேல

எவ்வாறாயினும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு நேற்று முன்தினம் (03) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ப்பட்டதுடன், இதில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது.

இதேவேளை, மலேசியாவிற்கு புறப்பட்டுச் செல்ல முன் இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இடையில் இம்மாதம் 5 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் உள்ளக கிரிக்கெட் போட்டியொன்றை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய விளையாட்டு விழா கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை மகளிர் அணி வீராங்கனைகள் விபரம்:

சமரி அட்டபத்து (தலைவர்), ஹர்ஷிதா மாதவி (உப தலைவர்), இனோகா ரணவீர, நிலாக்ஷி த சில்வா, ஹசினி பெரேரா, சுகந்திகா குமாரி, ஓஷதீ ரணசிங்க, அமா காஞ்சனா, உதேசிகா பிரபோதனி, அச்சினி குலசூரிய, அனுஷ்கா சன்ஜீவனி, கவீஷா தில்ஹரி, விஸ்மி ராஜபக்ஷ, சசினி நிசன்சலா.

மேலதிக வீரர்கள் – இமேஷா துலானி, சத்யா சந்தீபனி, மதுஷிகா மெத்தானந்த, காவ்யா காவிந்தி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<