ரொனால்டோவின் ‘பைசிகல் கிக்’ ஐரோப்பாவின் சிறந்த கோலாக தெரிவு

361

போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது தற்போதைய கழகமான ஜுவண்டஸுக்கு எதிராக ரியல் மெட்ரிட் சார்பில் அதிர்ச்சியூட்டும் வகையில் தலைக்கு மேலால் உதைத்த ‘பைசிகல் கிக்’ ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் (UEFA) பருவத்தின் சிறந்த கோலாக வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.  

ரொனால்டோவின் சாகசத்துடன் சம்பியன்ஸ் லீக்கில் ரியல் மெட்ரிட் ஆதிக்கம்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் …

டியூரினில் நடைபெற்ற கடந்த பருவத்தின் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் முதல் கட்ட காலிறுதிப் போட்டியிலேயே ரொனால்டோ அந்த அபார கோலை போட்டார். இதன்மூலம் பருவத்தின் சிறந்த கோலுக்கான போட்டியில் 11 பரிந்துரைகளில் இருந்து முன்னாள் ரியல் மெட்ரிட் வீரர் ரொனால்டோவின் கோல் தேர்வாகியுள்ளது.  

‘எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள். அந்த தருணத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன், குறிப்பாக அரங்கில் கூடியிருந்த ரசிகர்களின் கொண்டாட்டத்தை மறக்க மாட்டேன்’ என்று 33 வயதான ரொனால்டோ டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.  

சிறந்த கோலுக்காக மொத்தம் 346,915 வாக்குகள் பதிவாகி இருப்பதோடு இதில் ரொனால்டோ மாத்திரம் கிட்டத்தட்ட 200,000 வாக்குகளை வென்றுள்ளார்.  

அந்த சம்பியன்ஸ் லீக் போட்டியில், ரொனால்டோவின் கோலால் இத்தாலி சம்பியன் அணியான ஜுவண்டஸுக்கு எதிராக, ரியல் மெட்ரிட் ஏற்கனவே முன்னிலை பெற்றிருந்தபோதே 64 ஆவது நிமிடத்தில் டானி கர்வஜால் பரிமாற்றிய பந்தைக் கொண்டு ரொனால்டோ அந்த கோலை புகுத்தினார்.

ரொனால்டோவின் வருகையால் டொலர்களை அள்ளும் ஜுவான்டஸ்

உலகின் முதற்தர கால்பந்து வீரர் என வர்ணிக்கப்படும் …

இதனை தனது கால்பந்து வாழ்வில் சிறந்த கோல் என்று ரொனால்டோ குறிப்பிட்டிருந்தார். ரொனால்டோவின் கோல்கள் மூலம் 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் ரியல் மெட்ரிட் வெற்றி பெற்றது. கடந்த பருவத்தின் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கில் ஸ்பெயினின் ரியெல் மெட்ரிட் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் சம்பியனானது.

அந்த அபார கோலுக்கு எதிர்வினையாற்றிய ரசிகர்கள் குறித்து ரொனால்டோ குறிப்பிடும்போது, ”ஜுவண்டஸ் ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்” என்றார். இது 100 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தில் கடந்த மாதம் ஜுவண்டஸுக்குச் செல்ல முக்கிய காரணமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

ஐந்து முறை பல்லோன் டி ஓர் விருதை வென்றிருக்கும் ரொனால்டோ சம்பியன்ஸ் லீக்கில் 120 கோல்களை பெற்று அதிக கோல்களை பெற்றவராகவும் சாதனை படைத்துள்ளார்.  

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…