சிறந்த கால்பந்து வீரராக மெஸ்சியின் சாதனையை சமன் செய்த ரொனால்டோ

1136

போர்த்துக்கல் மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2017ஆம் ஆண்டுக்கானபெலான் டி ஓர்” விருதுக்கு பாத்திரமானார். இதன்படி, தங்கப்பந்து என்று அழைக்கப்படும்பெலான் டிஓர்விருதை ஐந்தாவது முறையாக வென்று லியொனல் மெஸ்சியின் சாதனையை ரொனால்டோ சமன் செய்தார்.

பார்சிலோனாவுடன் 2021 வரை விளையாட மெஸ்சி ஒப்பந்தம்

இந்த தலைமுறையின் தலைசிறந்த கால்பந்து..

சிறப்பாக விளையாடும் கால்பந்து வீரருக்கு, பிரான்ஸ் கால்பந்து சஞ்சிகை சார்பில் ஆண்டுதோறும் பிபா தங்கப்பந்து என்றழைக்கப்படும்பெலான் டிஓர்விருது வழங்கப்படும். இந்த விருதுக்கான வீரர், பத்திரிகையாளர்கள் குழுவால் தேர்வு செய்யப்படுவர். இந்த ஆண்டிற்கான 30 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலில் லியொனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் உள்ளிட்ட 30 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

மெஸ்ஸி ஐந்து முறை இந்த விருதை பெற்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்கு முறை இந்த விருதை பெற்றிருந்தார். ரியல் மெட்ரிட் அணி இந்த ஆண்டு லா லிகா, சம்பியன் லீக் ஆகிய கிண்ணங்களை வென்றுள்ளது. இதற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ முக்கிய காரணமாக இருந்ததுடன், அவ்வணிக்காக 42 கோல்களையும் பெற்றுக்கொடுத்தார். அத்துடன் போர்த்துக்கல் அணிக்கு ஐரோப்பிய கால்பந்து கிண்ணத்தையும் முதற்தடவையாக அவர் பெற்றுக்கொடுத்தார். இதனால் ரொனால்டோ இந்த ஆண்டிற்கான விருதை பெற்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்வார் என ஊடகங்கள் வாயிலாக பரவலாக பேசப்பட்டு வந்தன.

இந்நிலையில், கால்பந்து ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்த விருது வழங்கும் விழா பிரான்ஸ் தலைநகரான பரிஸின் ஈபிள் கோபுரத்துக்கு முன்னால் விமர்சையாக நேற்று(07) நடைபெற்றது.

இதில் போர்த்துக்கலின் நட்சத்திர வீரரான ரொனால்டோவுக்கும், ஆர்ஜன்டீனாவின் மெஸ்சிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது.

இதன்படி, உலக நாடுகளைச் சேர்ந்த 173 விளையாட்டு ஊடகவியலாயர்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (946 புள்ளிகள்) ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கால்பந்து வீரரான டேவிட் கினோலாவினால் வழங்கப்பட்டது.

இதன்மூலம் ஐந்தாவது முறையாக இந்த விருதை வென்ற ரொனால்டோ மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார். இதற்கு முன்னதாக அவர், 2008, 2013, 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கான 4 விருதைகளையும் பெற்றுக்கொண்டார்.

தடகள மன்னன் போல்ட்டுக்கு உருவச்சிலை; மீண்டும் சேதமாக்கப்பட்ட மெஸ்சியின் உருவச்சிலை

தடகள மன்னன், ஓய்வுபெற்ற உசைன் போல்ட்டுக்கு சொந்த..

5ஆவது முறையாகவும் இந்த விருதை வெல்லவேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளதாக தெரிவித்த ரொனால்டோ, இதற்கு உதவியாக இருந்த போர்த்துக்கல் மற்றும் ரியல்மெட்ரிட் அணிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார். அத்துடன், எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக இவ்விருதைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், குறித்த விருதுவழங்கும் விழாவில் ரொனால்டோவுக்கு கிறிஸ்மஸ் பரிசாக என்ன வேண்டும் என கேட்கப்பட்டது. அதன்போது இன்னுமொரு குழந்தை வேண்டுமா என அவருடைய காதலி ஜோர்ஜினா ரொட்ரிகஸ்ஸை கேலி செய்யும் விதமாக நிகழ்ச்சியின் தொகுப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ரொனால்டோ, தற்போது நாங்கள் 4 குழந்தைகளுடன் மகிழ்ச்சியைக் கொண்டாடவுள்ளோம். எனினும், எனக்கு 7 பெலான் டி ஓர் விருதுகளும், அதேபோல 7 குழந்தைகளும் வேண்டும் என சிரித்தவாறு பதிலளித்தார்.

முன்னதாக கடந்த ஒக்டோபர் மாதம் லண்டனில் நடைபெற்ற உலக கால்பந்து கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் விழாவிலும் 32 வயதான ரொனால்டோ, வருடத்தின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

FIFA உலகக் கிண்ண குழு நிலை அணிகள் அறிவிப்பு

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக்…

குறித்த வீரர்கள் பட்டியலில் அடுத்த இடத்தை லியோனல் மெஸ்ஸியும்(670 புள்ளிகள்), மூன்றாவது இடத்தை நெய்மரும்(670 புள்ளிகள்) பிடித்தனர்.

1956ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்ற பெலான் டிஓர் விருதானது 2010 முதல் 2015 வரை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்டு வந்தது. இதில் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக வழங்கப்பட்ட பெலான் டிஓர் விருதை மெஸ்ஸியும், ரொனால்டோவும் மாறி மாறி வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.