அவுஸ்திரேலியாவின் ஹோபர்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணி 316 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது. பின்னர் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி விக்கெட்டிழப்பின்றி 38 ஓட்டங்களை பெற்றுள்ளது.
பெதும் நிஸங்கவின் இரட்டைச்சதத்தினால் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் இலங்கை A வசம்
சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி ஆகியவை இடையே நடைபெற்ற உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின்
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. குறித்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகும் நிலையில், இலங்கை அணி மூன்று நாட்கள் பயிற்சிப் போட்டியொன்றில் கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகின்றது.
பகிலிரவு பயிற்சிப் போட்டியாக இன்று ஆரம்பித்த இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கிரிக்கெட் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன் அடிப்படையில் களமிறங்கிய அந்த அணி, ஆரம்பத்தில் தடுமாறிய போதும், குர்டிஸ் பெட்டர்சன் மற்றும் ஜெக் டொரன் ஆகியோரது அபார சதங்களின் உதவியுடன் சிறப்பான ஓட்ட எண்ணிக்கையை அடைந்துள்ளது.
போட்டியின் ஆரம்பப் பகுதியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருந்தனர். முக்கியமாக துஷ்மந்த சமீர மற்றும் கசுன் ராஜித ஆகியோர் விக்கெட்டுக்களை கைப்பற்ற, லக்மால் நேர்த்தியான முறையில் பந்துவீசி ஓட்டங்களை கட்டுப்படுத்தினார்.
சமீர மற்றும் ராஜிதவின் வேகப்பந்து ஆரம்பத்தின் மூலம் ஜோ பேர்ன்ஸ், மெட் ரென்ஷோவ் மற்றும் மெர்னஸ் லெபுசெங் ஆகியோரது விக்கெட்டுகள் வெறும் 25 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. எனினும், குர்டிஸ் பெட்டர்சன் மாத்திரம் நிதானமாக ஓட்டங்களை குவிக்க, தொடர்ந்து வந்த வில் பகோவ்ஸ்கி மற்றும் ஜேசன் சங்ஹா ஆகியோரும் விக்கெட்டுகளை பறிகொடுத்து ஏமாற்றினர்.
Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 61
நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியிலும் தோல்வியைத் தழுவி வெறுங்கையோடு திரும்பிய இலங்கை
இதற்கு பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜெக் டொரன், குர்டிஸ் பெட்டர்சனுடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினர். இருவரும் 218 ஓட்டங்களை 6வது விக்கெட்டுக்காக பகிர்ந்த நிலையில், அவுஸ்திரேலிய அணி ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.
இதில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய பெட்டர்சன் 157 ஓட்டங்களையும், ஜெக் டொரன் 102 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். இலங்கை அணியின் பந்து வீச்சில், துஷ்மந்த சமீர 3 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, இன்றைய ஆட்டநேர முடிவுவரை விக்கெட்டிழப்பின்றி துடுப்பெடுத்தாடி 38 (13) ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய திமுத் கருணாரத்ன 26 ஓட்டங்களையும், லஹிரு திரிமான்னே 12 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்துள்ளனர்.
போட்டி சுருக்கம்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க




















