AFC கிண்ண பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெற்ற கொழும்பு கால்பந்து கழகம்

733
Colombo FC vs Transport United

பூட்டானின் டிரான்ஸ்போட் யுனைடெட் அணிக்கு எதிராக AFC கிண்ண ஆரம்ப சுற்றின் இரண்டாம் கட்ட போட்டியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற கொழும்பு கால்பந்து கழகம் மொத்த 9-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்றது.

பூட்டான் கழகத்திற்கு எதிராக கோல் மழை பொழிந்த கொழும்பு கால்பந்து கழகம்

பூட்டானின் டிரான்ஸ்போட் யுனைடெட் அணிக்கு எதிரான AFC கிண்ண தகுதிகாண் சுற்றுப்..

இரண்டாவது கட்டப் போட்டி பூட்டான் தலைநகர் திம்புவில் உள்ள சங்லிமிதாங் அரங்கில் புதன்கிழமை (27) நடைபெற்றது.

மொத்தம் 6 கோல்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கிய கொழும்பு கால்பந்து கழகத்திற்கு அடுத்த பிளே-ஓப் சுற்றுக்கு முன்னேற பிரகாசமான வாய்ப்பு இருந்தது.

மறுபுறம் டிரான்ஸ்போட் யுனைடெட் குறைந்தது 6 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உடனேயே களமிறங்கியது.   

சொந்த மைதானத்தில் விளையாடுவதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த அணி ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்துவதை காணமுடிந்தது.

உறையும் குளிர் காலநிலைக்கு மத்தியில் விளையாடிய கொழும்பு கால்பந்து கழகம், தற்காப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தியதோடு எதிரணியினரின் தாக்குதல் ஆட்டத்தை முறியடிப்பதை நோக்காகக் கொண்டு ஆடியது. கொழும்பு அணிக்கு பதில் தாக்குதல்களை நடத்த சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் டிரான்ஸ்போட் யுனைடெட் வெளிப்படுத்திய தற்காப்பு ஆட்டம் தனித்து ஆடும் முன்கள வீரர் மொஹமட் ஆகிப்பால் முன்னேற முடியாமல் போனது.  

குறிப்பாக டிரான்ஸ்போட் யுனைடெட் வீரர்கள் ஆதிக்கம் செலுத்த முயன்றபோதும் கொழும்பு பாதுகாப்பு அரணை தாண்டுவது கடினமாக இருந்தது. இந்நிலையில் முதல் பாதி ஆட்டம் முடியும் நேரத்தில் டிரான்ஸ்போட் யுனைடெட்டினால் முதல் கோலை பெற முடிந்தது.

முதல் பாதி: டிரான்ஸ்போட் யுனைடெட் 1 – 0 கொழும்பு கால்பந்து கழகம்

டிரான்போட் யுனைடெட்டின் ஆதிக்கத்துடனேயே இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமானது. நீண்ட தூரத்தில் இருந்து மாத்திரம் டிரான்ஸ்போட் அணி பந்துகளை பரிமாற்றும் நிலையில் கொழும்பு அணி மத்திய களத்தை பலப்படுத்துவதில் அதிக அவதானம் செலுத்தியது.

வருகை அணியான கொழும்பு அணி, மைதானத்தின் சூழல் மற்றும் காலநிலையால் கடுமையான சிக்கலை எதிர்கொள்வது நன்றாக தெரிந்தது. போட்டிக்குள் நுழைவது அல்லது மூன்றுக்கும் மேல் பந்து பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்குக் கூட தடுமாறியது.

டிமித்ரியுடன் இணைந்து பொட்ரிக் மற்றும் மொஹமட் பஸால் ஜோடி மிக அறிதாக பந்தை பரிமாற்றி எதிரணி கோல் எல்லையை ஆக்கரமித்தபோது பந்தை கடத்துவதற்கு வீரர் இல்லாத நிலையில் கோல் பெற முடியாமல்போனது.

கோல் கம்பத்திற்கு நெருக்கமாக புத்திக்க பெரேரா உதைத்த பந்து பின்கள வீரர்களால் தடுக்கப்பட்ட நிலையில் 62ஆவது நிமிடத்தில் மொஹமட் பஸால் அதனை கோலாக மாற்றினார்.

உச்சத்தை எட்டுவதற்காக டிரான்ஸ்போட் யுனைடெட் கடுமையாக போராடியது. எனினும் போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்த கொழும்பு வீரர்கள் முன்னரை விடவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். இந்நிலையில் டிரான்ஸ்போட் யுனைடெட் வீரர் ஒலடெமி விக்டர் கோபத்தில் டுக்சன் புஸ்லஸை தாக்கியதால் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார்.

>> சாப் சம்பியன்ஷிப் தொடருக்காக தயாராகும் இலங்கை மகளிர் அணி

ஒரு வீரரை இழந்த நிலையிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேற மேலும் 8 கோல்கள் தேவைப்படும் நெருக்கடியுடன் டிரான்ஸ்போட் யுனைடெட் தனது ஆதிக்கத்தை செலுத்த அனைத்து நகர்வுகளின்போதும் தாக்குதல் ஆட்டத்தை முன்னெடுத்தது.

எனினும் டிரான்ஸ்போட் யுனைடெட் கோல்காப்பாளர் முன்னேறி வந்ததை கண்ட ஐசாக் அத்தேவு பந்தை உதைக்க அது கோல்காப்பாளருக்கு மேலால் சென்று வெற்றி கோலாக மாறியது. இதன்படி கொழும்பு கால்பந்து கழகம் சென்னையின் கால்பந்து கழகத்தை எதிர்கொள்ள தகுதி பெற்றது.

முழு நேரம்: டிரான்ஸ்போட் யுனைடெட் 1 – 2 கொழும்பு கால்பந்து கழகம்

கோல் பெற்றவர்கள்
டிரான்ஸ்போட் யுனைடெட் – 45′
கொழும்பு கா.க. – மொஹமட் பஸால் 62′, ஐசாக் அத்தேவு 82′

சிவப்பு அட்டை
டிரான்ஸ்போட் யுனைடெட் – ஒலடெமி விக்டர் 66′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<