காலி-கொழும்பு மோதும் மாகாண மட்ட இறுதிப் போட்டி ஒத்திவைப்பு

184

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் சுபர் ப்ரொவின்சியல் 50 ஓவர்கள் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த நிலையில், அது தற்பொழுது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்தப் போட்டியை காலவறை இன்றி ஒத்திவைக்க ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த தொடரின் கடந்த வியாழக்கிழமை (17) நடந்த கடைசி நாள் குழுநிலை போட்டிகளும் மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டன.

சுபர் ப்ரொவின்சியல் இறுதிப் போட்டியில் பெரேராவின் அணி

கொழும்பில் பெய்துவரும் மழை காரணமாக இலங்கை…

வானிலை முன்னறிவிப்பின்படி வார இறுதி மற்றும் அடுத்த வார ஆரம்பத்திலும் தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

பகலிரவு போட்டியாக ஆர். பிரேமதாச மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் தொடரின் இறுதிப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களை பிடித்த காலி மற்றும் கொழும்பு அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் இறுதிப் போட்டியை நடத்துவதற்கான மாற்றுத் திகதியை இலங்கை கிரிக்கெட் சபை இன்னும் வெளியிடவில்லை.   

இந்த செய்தி குறித்த மேலும் புதிய தகவல்களை பெறுவதற்கு ThePapare.com உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.  

குழு மட்டப் போட்டிகளின் நிறைவில் புள்ளிப் பட்டியல்