2025ஆம் ஆண்டின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறும் இடம் தொடர்பில் இன்று தீர்வு?

Champions Trophy 2025

32
Champions Trophy 25 fate to be decided today

2025ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் இடம் தொடர்பில் இன்று (29) இறுதித் தீர்வு எட்டப்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்த பும்ரா<<

2025ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் குறிப்பிட்ட தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றான  இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்திருப்பதனை அடுத்து, 2025ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணம் பாகிஸ்தானில் நடைபெறுவதில் சந்தேகம் நிலவுகின்றது.

அதன்படி சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில் இந்த தொடர் நடைபெறும் நடைபெறும் இடம் தொடர்பில் இன்று இறுதி முடிவு எடுக்கப்பட அதிக வாய்ப்புக்கள் இன்று (29) காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.) கூட்டத் தொடர் இன்று (29) நடைபெறவுள்ள நிலையிலையே சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் எதிர்கால நிலை குறித்து தீர்மானிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது தொடரினை இரண்டு நாடுகளில் நடாத்தும் திட்டத்திற்கு (Hybrid Model) குறைவான ஆதரவினை தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பாகிஸ்தானின் கோரிக்கைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவ்வணியானது எதிர்காலத்தில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் தொடர்களில் தமது கிரிக்கெட்  அணிகளை விளையாட அனுப்பாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<