சம்பியன்ஸ் லீக் தொடருக்கான குழுக்கள் அறிவிப்பு

71
UEFA Twitter
 

2021/22 பருவக்காலத்திற்கான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடருக்கான முதல் சுற்றில் விளையாடவுள்ள அணிகளுக்கான குழுக்கள் கடந்த வியாழக்கிழமை (26) அறிவிக்கப்பட்டன.

இஸ்தான்புலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னதாக 32 அணிகள் 4 பொட்களில் (POT) பிரிக்கப்பட்டன. இதில் சென்ற பருவகாலத்தில் ஐரோப்பாவில் முன்னணி 6 லீக்குகளில் முதலிடம் பெற்ற அணிகளும், சம்பின்ஸ் கிண்ண மற்றும் ஐரோப்பா கிண்ணங்களை வென்ற அணிகளும் முதலாம் பொட்டில் இடம்பெற்றன. அதைத்தொடர்ந்து மற்றைய அணிகள் அடுத்த 3 பொட்களிலும் பிரிக்கப்பட்டன.

Video – புதிய கழகத்தை தேடும் ரொனால்டோ!| FOOTBALL ULAGAM

இங்கு நடைபெற்ற குலுக்கலில், 32 அணிகளும் குழு Aயிலிருந்து குழு H வரைக்கும் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுக்களிலும் 4 அணிகள் இடம்பெறுமாறு குலுக்கல் முறை நடைபெற்றது.

இதனடிப்படையில் நடப்பு சம்பியனான செல்சி அணி ஜுவன்டஸ் அணியுடன் குழு H இலும், பிரீமியர் லீக் சம்பியன்களான மன்செஸ்டர் சிட்டி அணி, பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியுடன் குழு A இலும், புண்டஸ்லிகா சம்பியன்களான பேயர்ன் முனிச், பார்சிலோனா அணியுடன் குழு E இலும், லாலிகா சம்பியனான அட்லெடிகோ மட்ரிட், லிவர்பூல் அணியுடன் குழு B இலும் இடம்பெற்றுள்ளன.

அதேபோன்று, ஐரோப்பா கிண்ணத்தை வென்ற விலாரியேல் அணி, மன்செஸ்டர் யுனைடெட் அணியுடன் குழு F இலும் இடம்பெற்றுள்ளன. ஐரோப்பாவின் மற்றைய முன்னணி கழகமும் 7 தடவைகள் சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியதுமான ரியல் மட்ரிட் அணி இத்தாலியின் சம்பியனான இன்டர்மிலன் அணியுடன் குழு Dஇல் இடம்பெற்றுள்ளது.

மிகவும் விறுவிறுப்பாக அமையவுள்ள இந்த பருவக்காலத்திற்கான (2021/22) சம்பியன்ஸ் லீக் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 அல்லது 15 ஆம் திகதிகளில் ஆரம்பிக்கவுள்ளதாக UEFA அறிவித்துள்ளது.

SAFF சம்பியன்ஷிப் போட்டி அட்டவணை அறிவிப்பு

தொடர்ந்து  இப்பிரமாண்ட தொடரின் இறுதிப்போட்டி அடுத்த வருடம் 28 ஆம் திகதி ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அரங்கில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021/22 சம்பின்ஸ் லீக் ககுழுக்கள

குழு A  : மன்செஸ்டர் சிட்டி,  பரிஸ் செயின்ட் ஜெர்மைன், ரபி லைப்சிக், கிளப் ப்ருகஸ் 

குழு B   : அட்லெடிகோ மட்ரிட், லிவர்பூல், போர்டோ, ஏசி மிலன்

குழு C  : ஸ்போர்ட்டிங் லிஸ்பன், பொருசியா டோர்ட்மண்ட், அஜக்ஸ், பேசிக்டஸ்   

குழு D  : இன்டர்மிலன், ரியல் மட்ரிட், ஷாக்த்தேர் டொனேட்ஸ்க், ஷெரிப் டிரஸ்போல் 

குழு E  : பேயர்ன் முனிச், பார்சிலோனா, பெனிபிக்கா, டைனமோ கிவ் 

குழு F  : வில்லாரியல், மன்செஸ்டர் யுனைடட், அட்லாண்டா, யங் போயிஸ்  

குழு G  : லில்லி, செவில்லா, சல்ஸ்பர்க், வுல்ஸ்பர்க்

குழு H  : செல்சி, ஜுவன்டஸ், செநிட், மல்மோ  

                              >> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<