T20 உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு யாருக்கு? கூறும் ரசல், தமிம், மஹரூப்

இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ரசல் ஆர்னல்ட், பர்வீஸ் மஹரூப் மற்றும் பங்களாதேஷ் அணியின் வீரர் தமிம் இக்பால் ஆகியோர், இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்பதை எதிர்வுகூறியுள்ளனர். ரசல் ஆர்னல்ட், பர்வீஸ் மஹரூப் மற்றும் தமிம் இக்பால் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற YouTube நிகழ்ச்சியொன்றில் கலந்துரையாடிய...

மஹேலவின் கழகத்தில் இணைகிறார் குசல் மெண்டிஸ்

உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காக (CCC) விளையாடி வந்த குசல் மெண்டிஸ், போட்டித் தடைக்குப் பிறகு எஸ்எஸ்சி (SSC) கழகத்துடன் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் இளம் துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ், 2015 முதல் தொடர்ச்சியாக 6 ஆண்டுகளாக கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காக (CCC) விளையாடி வருகின்றார். இந்த நிலையில், தற்போது ஓராண்டு போட்டித்...

தம்மிக்க பிரசாத்திற்கு நன்றி தெரிவித்த சஹீட் அப்ரிடி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான சஹீட் அப்ரிடி, அவரது தாய் நாடான பாகிஸ்தானிற்கு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டமைக்காக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான தம்மிக்க பிரசாத்திற்கு நன்றிகளை தெரிவித்திருக்கின்றார். T20 உலகக்கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு யாருக்கு? கூறும் ரசல், தமிம், மஹரூப் பாகிஸ்தான் அணிக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணங்களை நியூசிலாந்து...

இந்தியா செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி

அடுத்த ஆண்டின் (2022) பெப்ரவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் என்பவற்றில் ஆடவிருக்கின்றது. பாகிஸ்தான் வந்து விளையாடுமாறு இலங்கைக்கு அழைப்பு இலங்கையின் இந்திய சுற்றுப்பயணத்தில் வரும் டெஸ்ட் தொடர், ஐ.சி.சி. இன் இரண்டாவது பருவகாலத்திற்கான உலக...

ஊழல் புகாரில் சிக்கினார் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர்

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) ஊழல் ஒழிப்பு சட்டத்தை மீறியதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அபு தாபி T10 லீக் கிரிக்கெட் போட்டித் தொடர்பில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகக் கூறி  ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையினால் மார்லன் சாமுவேல்ஸ் மீது இந்த குற்றச்சாட்டுக்கள்...

SAFF சம்பியன் கிண்ணம் வெல்வதே இலங்கை அணியின் இலக்கு

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள தற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடரில் கிண்ணம் வெல்வதே இலங்கை கால்பந்து அணிக்கு வழங்கப்பட்டுள்ள இலக்கு என்று இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார். இலங்கை அணி அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 16ஆம் திகதி வரை மாலைதீவுகளில் இடம்பெறவுள்ள SAFF சம்பியன்ஷிப் தொடருக்கான தயார்படுத்தல்களுக்காக...

LPL தொடர் நடைபெறவுள்ள திகதிகள் அறிவிப்பு ; வீரர்கள் பதிவு ஆரம்பம்!

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) இரண்டாவது பருவகால போட்டிகள், எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி முதல் 23ம் திகதிவரை நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதன்முறையாக கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் LPL தொடர் ஆரம்பமாகியிருந்தது. இந்தப்போட்டி தொடரின் சம்பியனாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி மகுடம் சூடியிருந்தது. மீண்டும் ஒத்திவைக்கப்படும் LPL தொடர்! இவ்வாறான நிலையில்,...

ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சம்சனுக்கு அபராதம்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் நேற்று (21) நடைபெற்ற போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசுவதற்கு தாமதமாக்கிய குற்றச்சாட்டுக்காக ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. IPL தொடரின் நேற்றைய (21)  போட்டியில், சஞ்சு சம்சன் தலைமையிலான ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, கே.எல்.ராஹுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இலங்கை வரும் பாகிஸ்தான்...
PAKvENG

அரச உத்தரவினால் இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்களை இரத்துச் செய்யவில்லை

பாகிஸ்தானுக்கான இங்கிலாந்து ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகளின் கிரிக்கெட் தொடர்களை இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) இரத்துச் செய்தது பாதுகாப்பு தொடர்பான தமது அறிவுரைக்கு அமைய அல்ல என பாகிஸ்தானுக்கான இங்கிலாந்து உயர் ஸ்தானிகர் கிறிஸ்டியன் டேர்னர் குறிப்பிட்டிருந்தார். >> பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை இரத்துச் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை நியூசிலாந்து கிரிக்கெட் அணி, பாதுகாப்பு காரணங்கள்...
video

Video – முதல் சொந்த மைதான போட்டியிலேயே அதிருப்தியுடன் வெளியேறிய மெஸ்ஸி | FOOTBALL ULAGAM

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், தொடர்ந்து யுனைடெட்டில் கோல் வேட்டையில் இருக்கும் ரொனால்டோ, 4 நிமிடங்களில் போட்டியை மாற்றிய ரியல் மட்ரிட்,  60 வருடங்களின் பின்னர் மிக மோசமான நிலையில் ஜுவென்டஸ் மற்றும் சொந்த மைதான அறிமுக போட்டியிலேயே விரக்தியுடன் வெளியே வந்த மெஸ்ஸி  போன்ற தகவல்களை பார்ப்போம். https://youtu.be/qVafgPnfQRs

அதிகமாக வாசிக்கப்பட்டது