இந்தப் பருவத்திற்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அவுஸ்திரேலியாவின் 15 பேர் அடங்கிய வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமரி அத்தபத்துவுக்கு அபராதம் விதித்த ஐசிசி
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி அடுத்த மாதம் லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் நடைபெறவிருக்கின்றது. இந்தப் போட்டியில் பங்கெடுக்கும் அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் இந்த டெஸ்ட் குழாம் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பினை அடுத்து மேற்கிந்திய தீவுகளில் பங்கெடுக்கும் டெஸ்ட் தொடரிலும் மாற்றங்களின்றி விளையாடவிருக்கின்றது.
அறிவிக்கப்பட்டிருக்கும் அவுஸ்திரேலிய அணியில் முக்கிய உள்ளடக்கமாக கேமரூன் கீரின் காணப்படுகின்றார். முன்வரிசை துடுப்பாட்ட வீரரான கேமரூன் கீரின் இறுதியாக 2024ஆம் ஆண்டின் மார்ச் மாதமே டெஸ்ட் போட்டியொன்றில் ஆடியதோடு அதன் பின்னர் முதுகு உபாதையினை எதிர் கொண்டிருந்தார்.
இதேவேளை சம்பியன்ஷ் கிண்ணத் தொடரில் பங்கெடுக்காது போயிருந்த அவுஸ்திரேலிய டெஸ்ட் அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசல்வூட் ஆகிய வீரர்களும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அணியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.
மீண்டும் ஆரம்பமாகும் ஐபிஎல்; புதிய அட்டவணை வெளியீடு
அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மேலதிக வீரராக ப்ரென்டன் டோக்கட்டிற்கு வாய்ப்பு வழங்கியிருப்பதோடு, சகலதுறை வீரரான போ வெப்ஸ்டரும் அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாத்தில் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார்.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் நடப்புச் சம்பியனாக அவுஸ்திரேலிய அணி காணப்படுவதோடு, அவர்களை எதிர்த்தாடும் தென்னாபிரிக்கா முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாம்
பேட் கம்மின்ஸ் (தலைவர்), ஸ்கொட் போலன்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கீரின், ஜோஸ் ஹேசல்வூட், ட்ராவிஸ் ஹெட், ஜோஸ் இங்லீஸ், உஸ்மான் கவாஜா, சேம் கொன்ஸ்ட்டாஸ், மெதிவ் குஹ்னமன், மார்னஸ் லபச்சேனே, நதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், போ வெப்ஸ்டர்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<