இந்தியாவின் கிரிக்கெட் அணிகள் அனைத்தும் ஆசியக் கிண்ணத் தொடர்களில் இருந்து வெயேறியிருப்பதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) குறிப்பிட்டுள்ளது.
RCB அணியில் இணையும் ஜிம்பாப்வே வேக நட்சத்திரம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஆசிய கிரிக்கெட் வாரியத்திடம் இந்த ஆண்டுக்கான ஆடவர் ஆசியக் கிண்ணத் தொடர் மற்றும் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடர் என்பவற்றில் இருந்து வெளியேறியதனை எழுத்து மூலம் அறிவித்ததாக நேற்று (19) ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் தேவஜித் சாய்கியா இந்த விடயங்கள் எதிலும் உண்மையில்லை என சுட்டிக்காட்டியுள்ளதாக இந்தியாவின் கிரிக்கெட் செய்தி ஊடகமான கிரிக்பஸ் (Cricbuzz) தெரிவித்துள்ளது.
அதேவேளை தேவஜித் சாய்கியா மேலும் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது இந்த விடயங்கள் குறித்து இன்னும் கலந்துரையாடவில்லை எனத் தெரிவித்துள்ளதோடு, வாரியம் தற்போது IPL போட்டிகள் மற்றும் அதனை அடுத்து இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் சுற்றுத் தொடர் போன்றவற்றிலேயே அதிக கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் – இந்தியா ஆகிய இரண்டு நாடுகள் இடையிலும் போர் பதற்ற நிலை ஏற்பட்டதன் காரணமாக அவையிரண்டும் எதிர்காலத்தில் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளும் சந்தேகத்திற்கிடமாகியுள்ள நிலையிலையே, இந்தியா ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் நிலவியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<