முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்க BCCI உத்தரவு

25

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் புதிய பருவத்திற்கான (2026) மினி ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை உடனடியாக, கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  

T20 உலகக் கிண்ணத்திற்கான தென்னாபிரிக்க குழாம் வெளியீடு

பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் அங்குள்ள சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் காரணமாக, இந்தியா – பங்களாதேஷ் இடையே தோன்றியிருக்கும் அரசியல் முரண்பாடுகளை கருத்திற் கொண்டு முஸ்தபிசுர் ரஹ்மானை நீக்கும் இந்த முடிவை BCCI எடுத்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றிருந்த IPL மினி ஏலத்தில், கடும் போட்டிக்கு மத்தியில் இந்திய நாணயப்படி 9.20 கோடி ரூபாய்களுக்கு (இலங்கை நாணயப்படி சுமார் 31.6 கோடி ரூபாய்களுக்கு)  முஸ்தபிசுர் ரஹ்மானை KKR அணி கொள்முதல் செய்திருந்தது. அவர் அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளராகச் செயற்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது BCCI செயலாளர் தேவஜி சைக்கியா, அவரினை நீக்கும் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேநேரம் முஸ்தபிசுருக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேர்வு செய்ய KKR அணிக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் ஒரு பக்கமிருக்க BCCI இன் இந்த அறிவிப்பினால் பங்களாதேஷ் இந்தியாவில் இந்த ஆண்டிற்கான T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆடுவதிலும் சந்தேகம் நிலவுகின்றது. பங்களாதேஷ் அணியானது உலகக் கிண்ணத் தொடரில் ஆடும் போட்டிகள் கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய மைதானங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டதக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<