பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) முன்னணி சகலதுறை வீரர் சகீப் அல் ஹசனிற்கு தொடர்ந்து தமது அணியில் ஆட முடியும் எனக் குறிப்பிட்டிருக்கின்றது.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நிர்வாக இயக்குனரான இப்திக்கார் ரஹ்மான் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையிலேயே சகீப் அல் ஹசனிற்கு தொடர்ந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணியில் ஆட முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாத இறுதியில் ஆரம்பமாகும் லங்கா பிரீமியர் லீக்!
சகீப் அல் ஹசன் கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதம் தொடக்கம் பங்களாதேஷ் அணிக்காக எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் ஆடியிருக்கவில்லை. சில அரசியல் விடயங்கள் இதற்கு காரணமாக இருந்த போதிலும், அவரினை தெரிவிற்கு எதிர்காலத்தில் கருத்திற் கொள்வதாக இப்திக்கார் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
”அவர் (சகீப் அல் ஹசன்) எந்த அணிக்கும் மிகப் பெரிய சொத்து. அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர். அவர் தனது பந்துவீச்சு முறையினை மாற்றிய பின்னர், இப்போது தான் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பியிருக்கின்றார். இது அவரின் (எம்முடனான) முடிவு அல்ல. அவர் தடைக்குப் பின்னர் திரும்பி சில போட்டிகளில் மாத்திரமே ஆடியிருக்கின்றார். இன்னும் அவரினை சில போட்டிகள் விளையாட விடுவோம். அதன் பின்னர் அவரினை (தேசிய அணியில் இணைப்பது) பற்றி பேச முடியும்.”
38 வயது நிரம்பிய சகீப் அல் ஹசன் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அவர் மீது சுமத்திய பந்துவீச்சு குற்றச்சாட்டில் இருந்து மீண்டு தனது பந்துவீச்சு முறையானது சரியென நிரூபித்ததனை அடுத்து சுமார் ஆறு மாத இடைவெளியின் பின்னர் PSL போட்டிகளில் ஆடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அண்மையில் ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவம் பெறாத ஐக்கிய அரபு இராச்சியத்துடன் நடைபெற்ற T20I தொடரினை 2-1 எனப் பறிகொடுத்த நிலையில் அடுத்ததாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே T20I தொடரில் விளையாடவிருக்கின்றது.
பங்களாதேஷ் அணியின் மோசமான தோல்வியின் பின்னர் அவ்வணியில் சிரேஷ்ட வீரர்களின் தேவை உணரப்பட்ட நிலையிலையே சகீப் அல் ஹசனின் மீள் வருகை தொடர்பிலான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<