ஆர்ச்சருக்கு இரண்டாவது கொரோனா பரிசோதனை

50

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரை இலக்காகக் கொண்டு இங்கிலாந்து அணி பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன், அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சருக்கு மற்றுமொரு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

இங்கிலாந்துமேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது

மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தில் என்ன செய்ய வேண்டும்?

இதற்கென இரு அணி வீரர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு முறையான கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   

இதன்படி, இங்கிலாந்து வீரர்களுக்கு முதல் கட்டமாக கொவிட் -19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை வந்துள்ளது.  

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக, 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்திலும் இங்கிலாந்து அணியினர் விளையாட உள்ளனர்

இதேநேரம், பயிற்சி ஆட்டங்களுக்கு முன்னதாக அவர்களுக்கு 2ஆவது கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இங்கிலாந்து அணி வீரர்களின் பயிற்சி முகாம் ஆரம்பமாகவதற்கு முன் ஜொப்ரா ஆர்ச்சருக்கு நாளைய தினம் (25) மற்றுமொரு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பில், இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், வார இறுதியில் ஜொப்ரா ஆர்ச்சரின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு தீடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளது

இதனால் குறித்த இருவருக்கும் பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டது. எனினும், பரிசோதனை அறிக்கையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

எதுஎவ்வாறாயினும், இங்கிலாந்து அணியின் பயிற்சி முகாம் ஆரம்பமாவதற்கு முன் ஜொப்ரா ஆர்ச்சருக்கு நேற்று (23) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வெளியாகும் முடிவைப் பொறுத்துதான் அவர் இங்கிலாந்து அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இங்கிலாந்து அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட 24 வயதான ஜொப்ரா ஆர்ச்சர், இறுதியாக இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா

எனினும், டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் போது ஜொப்ரா ஆர்ச்சருக்கு வலது முழங்கை பகுதியில் உபாதை ஏற்பட்டது. குறித்த போட்டியில் அவர் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.  

அதனை தொடர்ந்து உபாதை குணமடையாததன் காரணமாக இரண்டாவது, மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

அதன் பின்னர் நான்காவது போட்டியிலிருந்து எஞ்சிய ஒருநாள் மற்றும் T20i சர்வதேச தொடர்களிலிருந்து முழுமையாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு தென்னாபிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.  

இந்த நிலையில், தனது உபாதை குறித்து ஜொப்ரா ஆர்ச்சர், டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், எனக்கு கடந்த வாரம் ஸ்கேன் ஒன்று செய்யப்பட்டது. எனது எழும்பு முறிவு குணமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நான் முன்னரை விட குணமடைந்துள்ளேன் என தெரிவித்தார்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…